வீட்டு வசதி வாரியம் அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டு வசதி வாரியம் அறிவிப்பு

Added : ஆக 01, 2020
Share

மதுரை, மதுரை வீட்டு வசதி வாரியம் செயற்பொறியாளர் கூறியுள்ளதாவது: மதுரை மேலவாசலில் 544 குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் 2013 கட்டி முடிக்கப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் 53 குடியிருப்புகளுக்கு உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாததால் ஒதுக்கீடுதாரர்களுக்கு உத்தரவு வழங்கப்படவில்லை. இதுகுறித்து நேரிலும், தபால் மூலமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களை ஆக., 7 க்குள் சமர்ப்பித்து ஒதுக்கீடு உத்தரவுகளை பயனாளிகள் பெற வேண்டும். தவறினால் எவ்வித முன் அறிவிப்புமின்றி குடியிருப்புகளை வாரியம் எடுத்து கொள்ளும், என கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X