பொது செய்தி

தமிழ்நாடு

சிறுவாணியில் தொடரும் மழை: வெளுத்து வாங்குமென கணிப்பு

Added : ஆக 01, 2020
Share
Advertisement

கோவை:சிறுவாணி அணை பகுதியில், மழைப்பொழிவு தொடர்கிறது; நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, 30 மி.மீ., மழை பதிவாகியது.மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில், சிறுவாணி அணையை சுற்றியுள்ள பகுதிகளில், கடந்த சில நாட்களாக, மழைப்பொழிவு காணப்படுகிறது.கடந்தாண்டை போல், தொடர்ச்சியாக கன மழை பெய்ததால், நீர் மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, 30 மி.மீ., பதிவாகியுள்ளது.வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால், இம்மாதம் இரண்டாவது வாரம் வரை, மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில், மழைப்பொழிவு இருக்கும் என, வானிலை ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.இது தொடர்பாக, வானிலை ஆராய்ச்சியாளர் சந்தோஷ் கிருஷ்ணன் கூறியதாவது:மேற்கு பசிபிக் கடல் மற்றும் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி, இம்மாதம் முதல் வாரத்தில் உருவாக வாய்ப்புள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில், இரண்டாவது வாரம் வரை மழை தொடர வாய்ப்புள்ளது; சிறுவாணி, பில்லுார் அணைகளின் நீர்மட்டம் வெகுவிரைவாக உயரக்கூடும்.நீலகிரி, சிறுவாணி, வெள்ளியங்கிரி, வால்பாறை ஆகிய பகுதிகளில் கனமழை பதிவாகக்கூடும். கோவை, திருப்பூரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X