பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 1; மாநகராட்சி பள்ளிகளில் 3.67 சதவீதம் தேர்ச்சி அதிகரிப்பு

Added : ஆக 01, 2020
Share
Advertisement

கோவை:பிளஸ் 1 தேர்வில், கோவை மாநகராட்சி பள்ளிகள், கடந்த கல்வியாண்டை காட்டிலும், 3.67 சதவீதம் அதிக தேர்ச்சி பெற்றுள்ளதால், கல்விப்பிரிவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கோவை மாநகராட்சி சார்பில், 16 மேல்நிலைப்பள்ளிகள் நடத்தப்படுகின்றன. 2019-2020 கல்வியாண்டில், 592 மாணவர்கள், 1,212 மாணவியர், பிளஸ் 1 தேர்வெழுதினர்.இதில், 562 மாணவர்கள், 1,191 மாணவியர் தேர்ச்சி பெற்றனர். மொத்தம், 97.17 சதவீதம் தேர்ச்சி கிடைத்துள்ளது. இது, கடந்த, 2018-19 கல்வியாண்டை காட்டிலும், 3.67 சதவீதம் அதிகம்.2018-19 கல்வியாண்டில் தேர்வெழுதிய மாணவர்களும் குறைவு; தேர்ச்சியும் குறைவு. 2019-2020 கல்வியாண்டில் அதிக மாணவ, மாணவியர் தேர்வெழுதி, அதிக தேர்ச்சியை பெற்றுள்ளனர்.ராமகிருஷ்ணாபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நுாறு சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது. 13 பள்ளிகள், 95 சதவீதத்துக்கு மேலாகவும், ஒரு பள்ளி, 92.52 சதவீதம், ஒக்கிலியர் காலனி மாநகராட்சி பள்ளி, 88.68 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இப்பள்ளியில், 6 மாணவர்கள் தேர்ச்சி பெறாததால், சதவீதம் சரிந்துள்ளது.மாநகராட்சி பள்ளியில் படித்து, பிளஸ் 1 தேர்வெழுதியவர்களில், 30 மாணவர்கள், 21 மாணவியர் என, மொத்தம், 51 பேர் தேர்ச்சி பெறவில்லை என, மாநகராட்சி கல்வி பிரிவினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X