தமிழ்நாடு

கொரோனா பேரிடரிலும் பராமரிக்கப்படும் 'மியாவாக்கி' காடுகள் மதுரை மாநகராட்சி அசத்தல்

Added : ஆக 01, 2020
Share
Advertisement

மதுரை,:மதுரையில் கொரோனா பேரிடர் காலத்திலும் 31 இடங்களில் 'மியாவாக்கி' காடுகளை மாநகராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது.நிலத்தில் பள்ளம் தோண்டி கழிவு, இயற்கை உரங்களை கொட்டி, மிக நெருக்கமாக மரங்களை நட்டு பராமரிப்பது தான் 'மியாவாக்கி' காடுகள் ஆகும். இதை அடர் வனம் என அழைக்கின்றனர். இக்காடுகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை. பறவைகள், பூச்சியினங்கள், சிறிய உயிரினங்களுக்கு அடைக்கலமாக விளங்குகின்றன.மாநகராட்சி கமிஷனர் விசாகன் சோதனை முறையில் தன் இல்லத்தில் வளர்த்தார். மரங்கள் நன்றாக வளர்ந்ததால், மாநகராட்சி அலுவலகங்கள், காலி இடங்களில் பராமரிக்க உத்தரவிட்டார். எல்லீஸ் நகர், கற்பகம் நகர் நீரேற்று நிலையங்கள், தமுக்கம் ராஜாஜி பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சில மாதங்களுக்கு முன்பு இப்பணி துவங்கியது. தற்போது 31 இடங்களில் பராமரிக்கப்படுகிறது. ஒவ்வொன்றுக்கும் பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அதிகாரிகள் கூறுகையில், '1000 சதுரடியில் 400 மரங்களுடன் 'மியாவாக்கி' காடுகளை அமைக்கலாம். மரக்கன்றுகளுக்கான இடைவெளி 2, 3 அடி இருந்தால் போதும். மரங்கள் வளர்ந்த பின்னர் மிக நெருக்கமாக காட்சி தரும். 1வது மண்டலத்தில் 7, 2வது மண்டலத்தில் 12, 3 வது மண்டலத்தில் 8, 4வது மண்டலத்தில் 4 என இதுவரை 31 இடங்களில் இக்காடுகளை துவங்கியுள்ளோம். ஒவ்வொரு இடத்திலும் 150 மரங்கள் நடப்பட்டுள்ளன,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X