பொது செய்தி

தமிழ்நாடு

வரலட்சுமி நோன்பு வீடுகளில் கோலாகலம்

Added : ஆக 01, 2020
Share
Advertisement

கோவை:அம்மன் கோவில்களில் வரலட்சுமி நோன்பை ஒட்டி, சுமங்கலி பெண்கள் வளையல், மஞ்சள், குங்குமம் மற்றும் மங்கல சரடுகளை வழங்கியும், வீடுகளில் உணவு பரிமாறியும் கோலாகலமாக கொண்டாடினர்.கோவையை அடுத்த சென்னனுார் ராதாகிருஷ்ணர் கோவிலில், வரலட்சுமி நோன்பை ஒட்டி காலை சுவாமிக்கு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பெருமாள் மற்றும் தாயாருக்கு மங்கலக்கலசங்கள் எழுந்தருளுவிக்கப்பட்டு, மலர்மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.தொடர்ந்து நாலாயிரத்திவ்யபிரபந்தம், திருப்பாவை, திருப்பல்லாண்டு பாசுரங்கள் பாராயணம் செய்யப்பட்டன. சேலை, ரவிக்கை, மாங்கல்யம் உள்ளிட்ட மங்கலப்பொருட்கள் சமர்ப்பித்து, சுமங்கலி பெண்கள் சிறப்பு வழிபாடுகள் செய்தனர். வழிபாட்டில் பங்கேற்றவர்களுக்கு, மங்கலப்பொருட்களும் பிரசாதங்களும் வினியோகிக்கப்பட்டன.வீடுகளில் வயதில் மூத்த சுமங்கலிகளை அழைத்து, உணவு, சேலை, ரவிக்கை, மங்கலபொருட்கள் வழங்கி ஆசி பெற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X