பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்...திண்டுக்கல்

Added : ஆக 01, 2020
Share
Advertisement

கபசுரக் குடிநீர் வழங்கல்

திண்டுக்கல்: நாகல் நகரில் திண்டுக்கல் மிட்டவுன் ரோட்டரி சங்கத்தின் சார்பில் கொரோனா தொற்றின் தீவிரத்தை குறைக்கும் வகையில், கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது. சங்கத் தலைவர் எல். கஜேந்திரன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். செயலாளர் எஸ்.பி.நடராஜன் மற்றும் சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். அறுநுாறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கபசுரக்குடி நீர் பெற்றனர்.

வீரர்களுக்கு வரவேற்பு

பழநி: பழநியில் தீயணைப்பு வீரர்கள் 7 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினர். நேற்று பழநி தீயணைப்பு நிலையத்திற்கு மீண்டும் பணிக்கு வந்த அவர்களை, நிலைய அலுவலர் கமலகண்ணன் தலைமையில் மற்ற வீரர்கள், அலுவலர்கள் வெற்றிலை பாக்கு வைத்து, கைதட்டி வரவேற்றனர்.
ஒருவர் கைது

எரியோடு: கோவிலூர் வேடசந்தூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் பிச்சைமுத்து 54. இவர் நல்ல நேரம் மற்றும் தங்கம் என்ற பெயர்களில் தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள லாட்டரி சீட்டுகளை விற்று கொண்டிருந்தார். எரியோடு போலீசார் அவரை கைது செய்தனர்.

ஆர்ப்பாட்டம்

குஜிலியம்பாறை: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நில அளவை கட்டணம் உயர்வை கண்டித்து, குஜிலியம்பாறை ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடந்தது. மாவட்ட குழு உறுப்பினர் தம்பிமுத்து தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் தங்கவேல் முன்னிலை வகித்தார். மின்சாரம், கூட்டுறவுத் துறைகளில் மத்திய, மாநில அரசுகளின் போக்கை கண்டித்து ஆர்பாட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் ஜெயபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X