சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா பரிசோதனை செய்ய வலியுறுத்தல்

Added : ஆக 01, 2020
Share
Advertisement

கள்ளிமந்தையம்:ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் உள்ள சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கடை உரிமையாளர்கள், கணக்கர்கள், தொழிலாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இவர்களில் பெரும்பாலானோருக்கு கொரோனா 'நெகட்டிவ்' என முடிவு வந்துள்ளது. இந்நிலையில் மார்க்கெட்டுக்கு செல்லும் சரக்கு வாகன டிரைவர்கள் மற்றும் கிளீனர்களையும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

கரியாம்பட்டியைச் சேர்ந்த வீராச்சாமி மற்றும் ராமசாமி கூறியதாவது: கிராமப்பகுதிகளில் தொற்று பாதிப்படைந்த பலர் குணமடைந்துள்ளனர். இங்கிருந்து சரக்கு வாகனங்கள் பல, ஒட்டன்சத்திரம் மார்க்கெட் சென்று திரும்புகின்றன. இவர்கள் மூலமும் கொரொனா பரவ வாய்ப்புள்ளது. கிராம மக்களின் அச்சத்தை போக்கசரக்கு வாகன டிரைவர்கள், கிளீனர்களுக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X