சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மேட்டுப்பாளையத்தில் ஆண் யானை பலி

Added : ஆக 01, 2020
Share
Advertisement

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் வனப்பகுதியில், யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஆண் யானை இறந்தது.மேட்டுப்பாளையம், நெல்லிமலை வனப்பகுதியில், வனத்துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு ஆண் யானை உடல் நலம் பாதித்த நிலையில், படுத்து கிடந்தது. கால்நடை டாக்டர்கள் சுகுமார், ராஜேஷ்குமார் மருத்துவ பரிசோதனை செய்தனர். மேல் இடது தாடையில், கடவாய் பற்கள் பகுதியில், ஆழமான காயம் இருப்பது கண்டறியப்பட்டது. நேற்று காலை இந்த யானை இறந்தது.மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் கூறுகையில், ''யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், காயம் அடைந்து, இந்த யானை இறந்துள்ளது. கோவை வனக் கோட்டத்தில், சமீபத்தில் இதுபோல் நான்கு யானைகள் இறந்துள்ளன,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X