பொது செய்தி

இந்தியா

உத்தர்காண்டில் வெள்ளத்தில் சிக்கிய எம்.எல்.ஏ. மீட்பு: வைரலாக பரவும் வீடியோ

Added : ஆக 01, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
Uttarakhand MLA, Uttarakhand, viral video

பித்ரோகார்: உத்தர்காண்ட் மாநிலத்தில் வெள்ள சேதத்தை பார்வையிட வந்த காங். எம்.எல்.ஏ. ஆற்றில் தவறி விழுந்து வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டார். அவரை கிராமத்தினர் மீட்டனர். உத்தர்காண்ட் மாநிலத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழையால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பித்ரோகார் மாவட்டத்தில் தர்சூலார் என்ற பகுதியைச் சேர்ந்நத காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹரிஷ்தாமி நேற்று தனது ஆதரவாளர்களுடன் அப்பகுதியில் வெள்ள பாதிப்பை பார்வையிட அங்கு உள்ள சிறிய ஆற்றை கடந்து செல்ல முயன்ற போது நிலை தடுமாறி ஆற்றில் விழுந்தார். அவரை வெள்ளம் இழுத்துச்சென்றது. அப்போது, உடனிருந்த ஆதரவாளர்கள் ஆற்றில் இறங்கி அவரை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
இதனிடையே சமோலி மாவட்டத்தில் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதாவது பஜ்பூர் என்ற இடத்தில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவால் பத்ரிநாத் சாலை மூடப்பட்டுள்ளது. இதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாயின.



Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandramoulli - Mumbai,இந்தியா
01-ஆக-202009:13:37 IST Report Abuse
Chandramoulli அடுத்த தேர்தலில் வெற்றிக்கு வித்திட்டு விட்டார் . காங்கிரஸ் கட்சி சார்பில் நின்றாள் வெற்றி கடினம் என்பதை நன்றாக உணர்ந்து கேமரா எடுத்து சென்று உள்ளார்கள் .
Rate this:
Cancel
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
01-ஆக-202007:23:26 IST Report Abuse
Balasubramanian Ramanathan எம் எல் ஏ வழுக்கி வழுவாது ஒன்றும் புதியதல்லவே. வழக்கமாக வழிக்கிவிழ செய்வார்கள். இது ஒரு மாறுதல்.
Rate this:
Cancel
01-ஆக-202007:04:18 IST Report Abuse
kulandhai Kannan ஒன்றிணைவோம் வா என்று சென்றிருப்பாரோ!!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X