சிறுவன் மரண வழக்கு உயர்நீதிமன்றம் தடை| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சிறுவன் மரண வழக்கு உயர்நீதிமன்றம் தடை

Added : ஆக 01, 2020
Share

மதுரை:பழநி சின்னக்கலையம்புதுார் சேதுபதி. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

எனது 13 வயது மகன் 7வது வகுப்பு படித்தார். ஊரடங்கால் வீட்டில் இருந்தார். ஜூலை 24ல் ஒரு வீட்டில் மர்மமாக இறந்து கிடந்தார். அவரை சிலர் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். பழநி தாலுகா போலீசார் விசாரணையில் பாரபட்சம் உள்ளது. சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்ற வேண்டும். மறு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி ஆர்.பொங்கியப்பன்: போலீசார் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய தடை விதிக்கப்படுகிறது. மறு பிரேத பரிசோதனை கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X