பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் இதுவரை டிஸ்சார்ஜ் 8423 : விருதுநகரில் ஒரேநாளில் 455 பேர் குணமாகினர்

Added : ஆக 01, 2020
Share
Advertisement

மதுரை:மதுரையில் இதுவரை 8423 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். விருதுநகரில் நேற்று ஒரேநாளில் 455 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்.

மதுரையில் நேற்று புதிதாக 173 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 11 ஆயிரத்தை கடந்தது. புதிதாக பாதித்தவர்களில் 121 பேர் மதுரை நகரை சேர்ந்தவர்கள். 52 பேர் புறநகர் பகுதியில் வசிப்பவர்கள். மொத்த பாதிப்பு 11,009 ஆக உயர்ந்தது. நேற்று 202 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். இதுவரை 8423 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். 2349 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற 77, 62 வயது முதியவர்கள், 49 வயது ஆண், 51 வயது பெண் என 4 பேர் பலியாகினர். மொத்த பலி 237 ஆக உயர்ந்தது.

திண்டுக்கல் டிஸ்சார்ஜ் 177

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 177 பேர் குணமாகினர். மொத்தம் 2147 பேர் குணமாகியுள்ளனர். நேற்று 52 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 2812 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 615 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தேனி 154

தேனி மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 154 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். மொத்தம் 2786 பேர் குணமாகி உள்ளனர். ஆண்டிபட்டி ராஜதானி ஆரம்ப சுகாதார நிலைய 26 வயது பெண் டாக்டர், 46 வயது சுகாதார ஆய்வாளர், 49 வயது மருந்தாளுனர் உட்பட 299 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.டி. பொம்மிநாயக்கன்பட்டி 65 வயது முதியவர், கோம்பை அரண்மனை தெரு 70 வயது முதியவர், உத்தமபாளையம் 65 வயது முதியவர், கம்பம் 82 வயது முதியவர் பலியாகினர். மொத்த பலி 93 ஆக உயர்ந்தது.

ராமநாதபுரம் 24

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று கொரோனாவில் இருந்து 24 பேர் குணமாகி வீடு திரும்பினர். நேற்று மட்டும் 40 பேருக்கு தொற்று உறுதியானது. மாவட்ட பாதிப்பு எண்ணிக்கை 3255 ஆக உயர்ந்தது. பலி 71 ஆக உள்ளது.

சிவகங்கை 23

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து 23 பேர் நேற்று மீண்டனர். சிவகங்கை 75 வயது முதியவர் நேற்று உயிரிழந்தார். சிவகங்கையில் 13, காரைக்குடி 10, தேவகோட்டை 5, மானாமதுரை 2, ராமநாதபுரம் 2, திருப்புவனம், திருப்புத்துார், சிங்கம்புணரி, இளையான்குடி, நாட்டரசன்கோட்டையில் தலா ஒருவர் என நேற்று 37 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

விருதுநகர் 455

விருதுநகரில் நேற்று கொரோனா குணமான 455 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். விருதுநகர் ரயில்வே போலீஸ் ஏட்டு, சிவகாசி அரசு மருத்துவமனை செவிலியர்கள் ஐவர், தனியார் டாக்டர்கள் மூவர், சாத்துார் போலீசார் இருவர் உட்பட நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு கொரோனா உறுதியானது.

திருநெல்வேலி

திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நேற்று ஒரேநாளில் 470 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று 222 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மொத்தம் 5212 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 2948 பேர் குணமாகியுள்ளனர். நேற்று 3 பேர் பலியாகினர்.

துாத்துக்குடி மாவட்டத்தில் 284 பேர் நேற்று பாதிக்கப்பட்டதால் மாவட்ட பாதிப்பு 7107 ஆக உயர்ந்தது. 4846 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது 2214 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 4 பேர் பலியாகினர்.தென்காசி மாவட்டத்தில் நேற்று 59 பேருக்கு தொற்று ஏற்பட்டது.மொத்த பாதிப்பு 2032 ஆக உயர்ந்தது. 986 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 1027 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்த பலி 19 ஆக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X