கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சங்கரன்கோவில் ஆடித்தபசு விழா உயர்நீதிமன்றம் தள்ளுபடி

Added : ஆக 01, 2020
Share
Advertisement

மதுரை:சங்கரன்கோவில் சங்கரநாராயணா சுவாமி கோயில் ஆடித்தபசு விழா நடத்த தாக்கலான வழக்கை, உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

சங்கரன்கோவில் முத்துவைரம் தாக்கல் செய்த பொதுநல மனு:ஹரியும், சிவனும் ஒன்று என்பதை நிரூபிக்க கோமதி அம்மன் சங்கரலிங்க சுவாமியை நோக்கி தவம் புரிந்து, அதன் பயனாக சுவாமி தனது இடப்பாகத்தில் நாராயணரைக் கொண்டு, சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் வைபவம் ஆடித்தபசு திருநாள்.இதைக் கண்டால், விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கையில் பக்தர்கள் உள்ளனர்.

இம்முறை ஆடித்தபசு விழாவை ரத்து செய்து பதிலாக அபிேஷகம், அலங்காரம் செய்ய கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது ஆகம விதிகளுக்கு புறம்பானது. வழக்கம்போல் ஆக.,2 ல் ஆடித்தபசு விழா நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்தார்.

நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் அமர்வு விசாரித்தது. அறநிலையத் துறை சார்பில்,' கொரோனா பரவலை தடுக்க ஆக.,31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்திற்குள் விழா நடக்கும். பக்தர்களுக்கு அனுமதி இல்லை. அதிக பக்தர்களை அனுமதித்தால் சமூக இடைவெளியை பின்பற்ற வாய்ப்பில்லை; கட்டுப்படுத்த இயலாது,'என தெரிவிக்கப்பட்டது.நீதிபதிகள்,'இதில் எவ்வித உத்தரவும் பிறப்பிக்க இயலாது. தள்ளுபடி செய்கிறோம்,'என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X