இந்தியா

ஐ.எப்.இ.டி., கல்லூரியில் பயிலரங்கம்

Added : ஆக 01, 2020
Share
Advertisement

கண்டமங்கலம்;கெங்கராம்பாளையம் ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரியில் ஏ.ஐ.சி.டி.இ., நிதியுதவியுடன் 'சைபர் பிசிக்கல் மேன்பேக்சரிங் சிஸ்டம் பார் பியூச்சர் இண்டர்ஸ்ட்ரீஸ்' என்ற தலைப்பில் ஆன்லைன் பயிலரங்கம் நடந்தது.கடந்த 20ம் தேதி தொடங்கி 25ம் தேதிவரை 6 நாட்கள் நடந்த இந்த பயிலரங்கில் ஐ.ஐ.டி., என்.ஐ.டி., மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழக பேராசிரியர்களைக் கொண்டு நடத்தப்பட்டது.பயிற்சியில் பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி வகுப்பில் எதிர்காலத்தில் வரப்போகும் தொழில்நுட்பங்களையும், அதை தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் விதம் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.மலேசியாவை சேர்ந்த பேராசிரியர் யூஸ்ரிபின்யூசப் பயிலரங்கை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்துாரை சேர்ந்த டாக்டர் பழனி சிறப்புரையாற்றி முடித்து வைத்தார்.நிகழ்ச்சியில் கல்லுாரி தலைவர் ராஜா, துணை தலைவர் முகமதுஇலியாஸ், செயலர் சிவராம் ஆல்வா, கல்லுாரி முதல்வர் மகேந்திரன், துணை முதல்வர் மெட்டில்டா, வேலைவாய்ப்பு துறை தலைவர் பேராசிரியை ஆஷா ஆகியோர் கலந்துகொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை கல்லுாரி முதல்வர் டாக்டர் மகேந்திரன், மெக்கானிக்கல் துறை தலைவர் வேல்முருகன், பேராசிரியர் இளம்வழுதி ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X