சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வங்கிகள் கொரோனா பரப்பும் மையங்களாக மாறிவிட்டதா பீதியில் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள்

Added : ஆக 01, 2020
Share
Advertisement

மதுரை:தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க வங்கிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தபோதிலும், சில வங்கி ஊழியர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவது சக ஊழியர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளை ஒன்றில் 43 பணியாளர்களுக்கு கொரோனா ஏற்பட்டது. விசாரணையில், துணை பொதுமேலாளர் ஒருவர் மூலம் பரவியது தெரிந்தது. தொற்று கண்டறியப்பட்ட 2வது நாளில் அவர் இறந்தார். வங்கிக்கு சென்றுவந்த வாடிக்கையாளர்கள் யார் என கணக்கெடுக்கப்படுகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இரு வங்கிகளிலும் கொரோனா பரவியது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, வத்தலக்குண்டு வங்கிகளும் பாதிக்கப்பட்டன. அவர்கள் கூறியதாவது: கொரோனா அறிகுறி இருந்தால் அவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அரசு கூறுகிறது. வங்கிகளில் ஊழியர்களுக்கு அந்த வாய்ப்பு கொடுக்காமல் பணிக்கு வரச்சொல்கின்றனர். அறிகுறி உள்ளது என சக ஊழியர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் தெரிவிக்கக்கூடாது எனவும் எச்சரிக்கின்றனர்.

திருச்சியில் துணைபொது மேலாளரை வலுக்கட்டாயமாக பணிக்கு வரச்செய்தனர். ஒருகட்டத்தில் அவரால் பணி செய்ய முடியாமல் மருத்துவமனைக்கு சென்றார். இரண்டு மணி நேரத்தில் இறந்துபோனார். நிலக்கோட்டை வங்கி காசாளருக்கு தொற்று அறிகுறி ஏற்பட, 3 நாட்கள் தொடர்ந்து வேலை செய்ய வற்புறுத்தப்பட்டார். அந்த 3 நாட்களில் சிலருக்கு அவர் தொற்றை பரப்பினார்.

வாடிக்கையாளர்கள் நலன்மீது அக்கறை காட்டும் வங்கி நிர்வாகங்கள், ஊழியர்களை கண்டு கொள்வதில்லை.'டார்கெட்' என்றுக்கூறி ஊழியர்களின் உயிருடன் விளையாடுகின்றனர். எல்லா ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். சுழற்சி முறையில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X