இந்தியா

புதுச்சேரி அமலோற்பவம் மேனிலைப் பள்ளி பிளஸ் 1 தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி

Added : ஆக 01, 2020
Share
Advertisement

புதுச்சேரி; புதுச்சேரி அமலோற்பவம் மேனிலைப் பள்ளி பிளஸ் 1 பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை மூன்றாவது ஆண்டாக பெற்று சாதனை படைத்துள்ளது.புதுச்சேரி அமலோற்பவம் மேனிலைப் பள்ளி மாணவர்கள் பிளஸ் 1 தேர்வு எழுதிய 643 மாணவ-மாணவிகளும் தேர்ச்சி பெற்று, பள்ளிக்கு 100 சதவீத தேர்ச்சியை பெற்று தந்துள்ளனர். இச்சாதனை மூன்றாம் ஆண்டாக நிகழ்ந்துள்ளது.மாணவி ஜனனி 600க்கு 581, நந்தனா 576, மாணவர்கள் யுவராணி, பவன்குமார் ஆகியோர் 573 மதிப்பெண் எடுத்து பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர்.தேர்வு எழுதிய மொத்த மாணவர்களில் 301 பேர் 75 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். 308 பேர் 60 முதல் 74 சதவீதம் வரையிலான மதிப்பெண்ணுடன் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 550க்கு மேல் 13 பேரும், 500க்கு மேல் 122 பேரும், 450க்கு மேல் 301 பேரும், 400க்கு மேல் 516 மாணவர்கள் மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் 5 பேரும், வணிகவியல், வணிக கணிதம் பாடத்தில் தலா 2 பேரும், இயற்பியல் கணிதம், பொருளியல், கணக்கு பதிவியல் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடங்களில் தலா ஒரு மாணவர்கள் 100க்கு 100 எடுத்து சாதித்துள்ளனர்.பிரெஞ்சு பாடத்தில் 58 பேர் 99 மதிப்பெண்ணும், 25 பேர் 98 மதிப்பெண்ணும், 33 பேர் 97 மதிப்பெண்ணும், 23 பேர் 96 மதிப்பெண் பெற்றுள்ளனர். பிளஸ் 1 பொதுத் தேர்வில் சாததித்த மாணவர்களை பள்ளியின் முதுநிலை முதல்வர் லுார்துசாமி சால்வை அணிவித்து பாராட்டினார். மாணவர்களின் தேர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை பாராட்டினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X