பொது செய்தி

தமிழ்நாடு

இன்ஸ்பெக்டர் தகுதி இருக்கு... ஆனா பதவி உயர்வு இல்லை... காத்திருக்கும் 600 எஸ்.ஐ.,கள்

Added : ஆக 01, 2020
Share
Advertisement

மதுரை:போலீஸ் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வுக் கான தகுதி பெற்று அதற்குரிய சம்பளத்தை பெறும் எஸ்.ஐ.,க்களுக்கு இரண்டு ஆண்டுகளாகியும் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. நேரடி எஸ்.ஐ.,யாக 2008ல் 750 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

தாலுகா ஸ்டேஷன், ஆயுதப்படை, சிறப்பு பட்டாலியன் படைகளில் பணியமர்த்தப்பட்டனர். இதில் 600 பேர், 2016ல் ஆயுதப்படையில் இருந்து தாலுகா ஸ்டேஷன்களுக்கு இடம்மாற வாய்ப்பளிக்கப்பட்டது. பணியில் சேர்ந்து 10 ஆண்டுகளானதும் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். இதற்கான தகுதியை 2018 ல் இவர்கள் பெற்றபோதிலும் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இன்ஸ்பெக்டர்களுக்கான சம்பளம் பெறுகிறார்கள். இவர்கள் பேட்ஜில் 44 பேர் மட்டும் இன்ஸ்பெக்டராகி உள்ளனர்.

பாதிக்கப்பட்ட எஸ்.ஐ.,கள் கூறியதாவது:எங்களுக்கு பிறகு 2011ல் ஆயுதப்படையில் சேர்ந்தவர் கள் இன்று இன்ஸ்பெக்டராகி எங்களுக்கு மேல் அதிகாரியாக உள்ளனர். ஜூனியர்களான அவர்கள் சொல்வதை சீனியர்களான நாங்கள் கேட்க வேண்டியுள்ளது. தமிழகத்தில் இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்கள், சைபர் கிரைம் ஸ்டேஷன்களில் உள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பலாம். அரசின் நிதிநிலை பாதிக்காது. அரசும் டி.ஜி.பி., திரிபாதியும் பரிசீலிக்க வேண்டும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X