இந்தியா

96.87 %: புதுச்சேரியில் பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சிகடந்த ஆண்டைவிட 2.09 சதவீதம் அதிகம்

Added : ஆக 01, 2020
Share
Advertisement
 96.87 %: புதுச்சேரியில் பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சிகடந்த ஆண்டைவிட 2.09 சதவீதம் அதிகம்

புதுச்சேரி; புதுச்சேரியில், பிளஸ் 1 பொதுத் தேர்வில் 96.87 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, கடந்த ஆண்டைவிட2.09 சதவீதம் அதிகமாகும்.புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 1 பொதுத் தேர்வில் புதுச்சேரி மற்றும் காரைக்காலை சேர்ந்த 6,881 மாணவர்கள், 7,799 மாணவிகள் என மொத்தம் 14 ஆயிரத்து 680 பேர் பங்கேற்றனர்.கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. நீண்ட இழுபறிக்கு பின் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.இதில், 6,566 மாணவர்கள், 7,654 மாணவிகள் என மொத்தம் 14 ஆயிரத்து 220 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 96.87 சதவீதம் தேர்ச்சி கிடைத்துள்ளது.அரசு மேல்நிலைப் பள்ளிகளை பொறுத்தவரை 93.55 சதவீத தேர்ச்சியை அளித்துள்ளன. அதேசமயம், தனியார் பள்ளிகள் 99.43 சதவீத தேர்ச்சியை பதிவு செய்து அசத்தி உள்ளன.புதுச்சேரி பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இணைந்து 97.14 சதவீதம் தேர்ச்சியை தந்துள்ளன.காரைக்கால் பகுதியில் அரசு பள்ளிகளும், தனியார் பள்ளிகளும் சேர்ந்து 95.38 சதவீதம் தேர்ச்சியை அளித்துள்ளன.கடந்த 2019ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது ஒட்டுமொத்தமாக தேர்ச்சி 2.09 சதவீதம் அதிகரித்துள்ளது. அரசு பள்ளிகளை பொறுத்தவரை 4.38 சதவீதம் அளவுக்கு தேர்ச்சி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X