இந்தியா

கடைகள் திறந்திருக்கும் நேரம் நீட்டிப்பு; முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

Added : ஆக 01, 2020
Share
Advertisement

புதுச்சேரி; புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு கிடையாது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.புதுச்சேரி சட்டசபையில், நேற்று மாலை முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், கந்தசாமி, கமலக்கண்ணன், தலைமை செயலர் அஸ்வனிகுமார், அரசு செயலர்கள், சுகாதாரத்துறை இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் புதுச்சேரியில் கொரோனா பரவலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு தளர்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.கூட்டத்திற்கு பின் முதல்வர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:மாநிலத்தில் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று கடைகள், மால்கள், ஓட்டல்களின் வியாபாரம் நேரம் இரவு 9:00 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இரவு 9 மணிக்கு பிறகு கடைகள் மூடி இருக்க வேண்டும். இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். இந்த உத்தரவு வரும் 31ம் தேதி வரை அமலில் இருக்கும்.மாநிலத்தில் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. 63 சதவீத பேர், குணமடைந்து வீட்டிற்கு சென்றிருந்தாலும் கூட இம்மாதம் 31ம் தேதி வரை குறைந்தபட்சம் 2,500 பேரும், அதிகப்பட்சம் 6,000 பேர் பாதிக்கப்படுவர் என மருத்துவ துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.அதை கருத்தில் கொண்டு தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் நியமிக்கவும், மருத்துவ கருவிகள், மருந்துகள், டெஸ்ட் கிட் வாங்க அரசு சார்பில் நடவடிக்கை எடுத்துள்ளோம். ஜிம் திறப்பது தொடர்பாக மத்திய அரசு உத்தரவு வந்ததும் முடிவு செய்வோம்.புதுச்சேரியில் இருந்து வெளியே செல்பவர்களும், உள்ளே வருபவர்களும் இ-பாஸ் பெற்றிருக்க வேண்டும். இந்த உத்தரவு புதுச்சேரி, காரைக்காலில் வரும் 31ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். மாகியில் கேரளாவை பின்பற்றியும், ஏனாமில் ஆந்திராவை பின்பற்றியும் ஊரடங்கு நேரம் பின்பற்றப்படும்.ஜிப்மரில் 150 படுக்கைகள் அதிகமாக கொடுப்பதாக தெரிவித்துள்ளனர். தனியார் கல்லுாரிகளில் காலியாக உள்ள இடங்களை மாநில அரசு எடுத்துக்கொண்டு, அதனை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது.புதுச்சேரியில் ஞாயிற்றுகிழமை ஊரடங்கு கிடையாது. புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபயிற்சி செய்ய தற்போதுள்ள நடைமுறைப்படி காலை மட்டும் அனுமதிக்கப்படும்.இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X