இந்தியா

கொரோனா தொற்று அதிகரிப்பு: ஏனாமில் அமைச்சர், கலெக்டர் முகாம்

Added : ஆக 01, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

புதுச்சேரி; ஏனாமில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், சிகிச்சைக்காக கூடுதல் படுக்கைகளை ஏற்பாடு செய்வது தொடர்பான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.ஏனாமில் கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது. அங்குள்ள அரசு பொது மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு 73 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், கடந்த 3 நாட்களாக ஏனாமில் முகாமிட்டு, தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகளை வேகப்படுத்தி வருகிறார். கள நிலவரத்தை பார்வையிடுவதற்காக சுகாதாரத் துறை செயலரும், கலெக்டருமான அருணும் அங்கு சென்றுள்ளார்.ஏனாமில் உள்ள பொது மருத்துவமனையில் 80 படுக்கைகள் உள்ளன. இதில், 40 படுக்கைகள் மட்டுமே கொரோனா வார்டில் உள்ளன. மற்ற படுக்கைகள் பிற நோயாளிகளின் பயன்பாட்டில் இருக்கின்றன.படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் நவோதயா வித்யாலயா, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., ஆகிய கல்வி நிறுவனங்களை கொரோனா மருத்துவமனையாக மாற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.அமைச்சரும், கலெக்டரும் அதிகாரிகளுடன் சென்று கல்வி நிறுவனங்களை நேற்று பார்வையிட்டனர். அங்கு செய்ய வேண்டிய வசதிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.தொடர்ந்து, மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர், மண்டல நிர்வாகி மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர். கொரோனா பரவலை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalaimathi - Puducherry,இந்தியா
02-ஆக-202015:40:59 IST Report Abuse
kalaimathi நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்ப செயல் . உலகப்பொதுமறை ..... புதுவை யூனியன் பிரதேசம் மிகச் சிறியது .இங்கு இரண்டு அதிகார மையம் . கணக்கற்ற I.A.S. அதிலும் தமிழ் நன்கு தெரிந்த ஆளுநரின் O.S.D. துடிப்பான ஆர்வம் மிக்க இளம் ஆட்சியர்.அத்துணை பேர் இருந்தும் தினமும் நூற்றுக்கணக்கில் நோய் தொற்று. இறப்புக்களுக்கு காரணம் கண்டுபிடிப்பதில் வித்தகர் நமது துறையின் இயக்குநர். நோய் பரவுவதன் காரணத்தை அவரால் கண்டு பிடிக்க முடியவில்லை. இன்று 100 பேர். நாளை 200 பேர் .தனிமை படுத்துதல் என்றால் என்ன ? மருத்துவ துறையின் இயக்குநருக்கு ஒரு சிறிய வேண்டுகோள்..இறப்புக்கு காரணம் கூறுவதை போல் தொற்றுக்கு தகுந்த காரணம் கூறி அதை சரிவர கடைப்பிடிக்காதவர்களை கடுமையாக தண்டித்து தொற்றினை குறைக்க மேல் குறிப்பிட்ட அனைவரின் ஒத்துழைப்பையையும் நாடி பாவப்பட்ட உயிர்களை காக்கவேண்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X