மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு| Dinamalar

இந்தியா

மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு

Added : ஆக 01, 2020
Share

புதுச்சேரி; உயிரியல் பாடத்தில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.வ.உ.சி., அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் உயிரியல் பாடத்தில் மாணவர்கள் முகமது ஷபிக், முகம்மது ரபிக் ஆகியோர் பள்ளியில் முதல் மற்றும் இரண்டாவது இடத்தை பிடித்தனர்.பள்ளி முதல்வர் சாய் வர்கீஸ் முன்னிலையில், இரண்டு மாணவர்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசை, விலங்கியல் விரிவுரையாளர் செல்வநாயகி வழங்கினார். விரிவுரையாளர் பவுலின்மேரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X