பொது செய்தி

இந்தியா

கொரோனா நிலைமை சீரானதும் பூமி பூஜை நடந்திருக்கலாம் - ராஜ் தாக்கரே

Updated : ஆக 01, 2020 | Added : ஆக 01, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement

மும்பை: கொரோனா தொற்றுநோய்க்கு இடையில் ராமர் கோயில் பூமி பூஜை தேவையில்லை, நிலைமை சீரான பின் அதனை வைத்திருந்திருக்கலாம் என்று மஹாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கூறியுள்ளார்.latest tamil newsஉத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ஆகஸ்ட் 5-ம் தேதி பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ராமர் கோவில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நடைபெற உள்ளது. விழாவில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட 50 வி.வி.ஐ.பிக்கள் பங்கேற்கின்றனர்.

இந்த நிலையில் மராத்தி சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த ராஜ் தாக்கரே கூறியதாவது: மக்கள் வேறுபட்ட மனநிலையில் இருக்கும் இந்த நேரத்தில் பூமி பூஜை தேவையில்லை. இரண்டு மாதங்களுக்குப் பிறகு நிலைமை சீரானதும் இது நடந்திருக்கலாம். மக்கள் விழாவை ரசித்திருப்பார்கள்.


latest tamil newsகொரோனா நிலைமையை மஹாராஷ்டிரா அரசு தவறாக கையாள்கிறது. மக்களை அச்சத்திலிருந்து விடுவிக்க வேண்டியது முக்கியம். மாநில அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள், தொலைக்காட்சி சேனல்களில் வரும் செய்திகள் மற்றும் வாட்ஸ்அப்பில் வரும் செய்திகள் அனைத்தும் ஒரு வகையான குழப்பத்திற்கு வழிவகுக்கின்றது. முதல்வராக உத்தவ் தாக்கரே டிவியில் மட்டுமே செயல்படுகிறார். அவரது பணியை கடந்த ஐந்து மாதங்களில் என்னால் பார்க்க முடியவில்லை. இவ்வாறு கூறியுள்ளார்.


Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand - chennai,இந்தியா
01-ஆக-202016:21:26 IST Report Abuse
Anand பாபர் மசூதி, பாபர் என்ன அவன் அப்பன் வீட்டு இடத்திலா மசூதியை கட்டினான்? கோவிலை இடித்து தானே அந்த துருக்கி நாட்டு கயவன் கட்டினான். இதை அறிந்தும் அறியாததை போல் சில மூர்க்கங்கள் போலி பெயரில் முட்டுக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
01-ஆக-202010:27:16 IST Report Abuse
A.George Alphonse சீக்கிரம் ஸ்ரீராமருக்கு கோயில் காட்டினால் ஒருவேளை அவர்மனம் குளிர்ந்து காரோண வைரஸை மொத்தமாக அழித்து நமது நாட்டை இந்த கொடூர உயிர் பலியில் இருந்து காப்பாற்றலாம்.இவ்வளவு நாட்கள் காத்திருந்தது போதும்.இனி நல்லதே நடக்கும்.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
01-ஆக-202014:50:48 IST Report Abuse
 Muruga Velவாட்டிக்கன்ல பருப்பு வேக மாட்டேங்குதா .....
Rate this:
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
01-ஆக-202022:29:06 IST Report Abuse
A.George Alphonseஉன் கூற்றுப்படியே வட்டிகான்ல பருப்பு வேகலே.ஆகஸ்ட் மாதம் அயோத்திலே பருப்பு வேகுதான்னு பார்ப்போம்....
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
01-ஆக-202010:25:31 IST Report Abuse
Anand கொரோன நிலைமை சீராக இன்னும் பல வருடங்கள் ஆகலாம், அதுவரையில் எவனும் எதுவும் செய்யாமல் இருக்கிறானா? கோவில் விஷயத்தில் மட்டும் ஏன்டா தேவையில்லாமல் மூக்கை நுழைக்கிறீர்கள், அப்படி நுழைத்தால் உங்களை ஆஹா ஓஹோ என மூர்க்கம் மெச்சிக்கொள்ளுமா? அந்த ஜொள்ளுவாயான் தான் அப்படி உளறுகிறான்...மொத்தத்தில் மோடியை தூற்ற வேண்டும் அதற்க்காக மதிகெட்டு ....
Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
01-ஆக-202013:12:11 IST Report Abuse
தமிழ்வேல் ராமர் கோவில் கட்டுவதற்காக பாபர் மசூதியை இடித்த தன்னார்வலர்கள், பூமி பூஜையில் கலந்துகொள்ள ஆசைப் படமாட்டார்களா ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X