பொது செய்தி

தமிழ்நாடு

இசை குறிப்புகள் திருட்டு: போலீஸ் கமிஷனரிடம் இளையராஜா புகார்

Updated : ஆக 01, 2020 | Added : ஆக 01, 2020 | கருத்துகள் (43)
Share
Advertisement
சென்னை :'பிரசாத் ஸ்டுடியோவில், தனக்கு ஒதுக்கப்பட்ட, ரெகார்டிங் தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த, விலை மதிப்பற்ற இசை குறிப்புகள் உள்ளிட்ட பொருட்கள் திருடி விற்கப்பட்டுள்ளன' என, இசையமைப்பாளர் இளையராஜா போலீசில் புகார் அளித்துள்ளார்.சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், இளையராஜா சார்பில், நேற்று அளிக்கப்பட்ட புகார்:சென்னை, சாலிகிராமத்தில், திரைப்பட தயாரிப்பாளர்,
Ilayaraja, music, tamil cinema, LV Prasad studios,
இசை குறிப்புகள் திருட்டு: போலீஸ் கமிஷனரிடம் இளையராஜா புகார்

சென்னை :'பிரசாத் ஸ்டுடியோவில், தனக்கு ஒதுக்கப்பட்ட, ரெகார்டிங் தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த, விலை மதிப்பற்ற இசை குறிப்புகள் உள்ளிட்ட பொருட்கள் திருடி விற்கப்பட்டுள்ளன' என, இசையமைப்பாளர் இளையராஜா போலீசில் புகார் அளித்துள்ளார்.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், இளையராஜா சார்பில், நேற்று அளிக்கப்பட்ட புகார்:சென்னை, சாலிகிராமத்தில், திரைப்பட தயாரிப்பாளர், எல்.வி.பிரசாத்திற்கு சொந்தமான, 'பிரசாத் ஸ்டுடியோ' என்ற, கட்டடம் உள்ளது. இதில், ஒரு பகுதியை, எனக்கு எல்.வி.பிரசாத், ரெகார்டிங் தியேட்டர் அமைத்து கொள்ள ஒதுக்கி தந்தார்.அதில், பல கோடி ரூபாய் செலவு செய்து, பாடல் பதிவு கூடங்கள் அமைத்தேன். ஏராளமான இசைக் கருவிகள், விலை மதிப்பற்ற, இசைக் குறிப்புகள் உள்ளிட்ட பொருட்கள் இருந்தன.இந்த இடத்தில் இருந்து தான், 1977ல் இருந்து, தமிழ், தெலுங்கு என, பல்வேறு மொழி படங்களுக்கு, 7,000க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளேன்.


latest tamil newsஇந்நிலையில், 2019 செப்டம்பரில், எல்.வி.பிரசாத்தின் வாரிசான, ரமேஷ் பிரசாத் என்பவரின் மகன் சாய் பிரசாத், அந்த இடத்தில் இருந்து, என்னை வெளியேற்ற, பல வழிகளில் தொல்லை கொடுத்தார்.சட்ட விரோதமாக மின்சாரம், தண்ணீரை துண்டித்தார். தற்போது, ஊரடங்கு காரணமாக, என், 'ரெக்கார்டிங் தியேட்டர்' பூட்டப்பட்டு உள்ளது.சில தினங்களுக்கு முன், சாய் பிரசாத் துாண்டுதலில், மர்ம நபர்கள், எனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டுள்ள, இசைக் கருவிகள் உள்ளிட்ட பொருட்களை, சேதப்படுத்தி இருப்பதாக அறிகிறேன்.

அத்துடன், விலை மதிப்பற்ற, என் இசைக் குறிப்புகள் திருடப்பட்டு, வேறு நபர்களுக்கு விற்கப்பட்டு இருப்பதும் தெரிய வருகிறது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். சாய் பிரசாத் மற்றும் மர்ம நபர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, புகாரில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
02-ஆக-202006:22:06 IST Report Abuse
Indhuindian மிகவும் கீழ்தரமாக நடந்துகொள்கிறார். குடியிருக்க அந்த வீட்டை வாடகைக்கு எடுத்தீங்க நல்ல ராசியான இடம் பணம் புகழ் எல்லாம் வந்தது அப்புறம் ஒன்னு அவங்க காலி சொன்னப்ப சத்தம் போடம காலி பண்ணனும் இல்லேன்னா அவங்க கிட்டே அந்த இடத்தை விலை கொடுத்து வாங்கிடணும். அதை விட்டுட்டு இந்த மாதிரி ஒரு பேட்ட தாதா ரேஞ்சுக்கு நடந்தா அப்புறம் என்னத்த சொல்ல
Rate this:
Cancel
KRISHNA - Chennai,இந்தியா
01-ஆக-202017:25:58 IST Report Abuse
KRISHNA கோடிக்கணக்கான கோள்கள் உள்ள இந்த பிரபஞ்சத்தில், ஈடு இணை இல்லாத, நம்பர் ஒன் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா. இசைஞானியின் பிரம்மாண்டமான இசைஞானத்திற்கு முன்னாடி, ஆஸ்கார் விருது உண்மையிலேயே சிறியது. LONDON-ல் உள்ள ROYAL PHILHARMONIC ORCHESTRA - விற்கு வெறும் பதிமூன்றே நாட்களில், முழுமையான SYMPHONY இசை குறிப்பை உருவாக்கி கொடுத்திருக்கிறார் இசைஞானி. இது சிம்பொனி இசை உலக வரலாற்றில், மிகப்பெரிய உலக சாதனையாகும். இசைஞானியின் இந்த இசை குறிப்பை CONDUCT செய்த MUSIC CONDUCTOR JOHN SCOTT இசைஞானியின் மிக வேகமான இசையமைப்பை பார்த்து அதிர்ச்சியாகிவிட்டார். காரணம், ஒரு முழுமையான SYMPHONY இசை குறிப்பை உருவாக்க, ஆறு மாதமாவது ஆகும். இந்த செய்தியை, இசைஞானியிடம் ஆரம்பம் முதல் இசைக்கருவி வாசிப்பாளராக இருந்த, மறைந்த KEY BOARD PLAYER VIJI MANUEL ஒரு தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்தார். கடந்த 44 வருடங்களில், 7000 பாடல்களை இசையமைத்திருக்கிறார். “இசையில் இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கிறது. மக்களுக்கு மிகக் குறைந்த அளவு இசை தான் கொடுத்திருக்கிறேன். மக்களுக்கு இன்னும் நிறைய இசையை என்னால் கொடுக்க முடியும்” என்கிற மாதிரி ஒரு பேட்டியில் இசைஞானி கூறியிருந்தார். அறவோன் நீ என்னடான்னா, OSCAR பாராட்டு விழா அப்படி, இப்படின்னு உளறிக்கிட்டு இருக்க. நீ ஒரு கெட்ட எண்ணம் புடிச்சவன் என்று உன்னுடைய விமர்சனங்களிலிருந்து தெளிவாக தெரிகிறது.
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
01-ஆக-202015:55:51 IST Report Abuse
Baskar அடுத்தவன் சொத்துக்கு ஆசை பட்டால் இப்படித்தான் நடக்கும் . ஒண்ட வந்த இடத்தில் ஊர் பிடாரியை விரட்டுகிறது என்ற பழமொழியை கேட்டதில்லையா. என் நீயே இந்த வேலைகளை செய்து இருக்க கூடாது. இசைக்கு தான் நீ ராஜா எல்லாவற்றுக்கும் அல்ல. தற்போது நீ ஒரு வக்கீலை ஏற்பாடு செய்து இருக்கிறாயே அவன் ஒரு தி.மு.க அவனுக்கு தெரியும் அடுத்தவன் சொத்தை எப்படி ஆட்டையை போடுவதென்று.
Rate this:
Balaji - Chennai,இந்தியா
01-ஆக-202017:15:25 IST Report Abuse
Balajiஅவரு அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்பட்ட மாதிரி தெரியலையே... உங்களுக்கே நியாயமா இருக்கா? 1977 லிருந்து வாடகைக்கு இருக்கிறார். திடீரென்று 2019 செப்டம்பர் இல் காலி செய்ய சொல்கிறார்கள். இவர் செய்யும் தொழிலுக்கு எவ்வளவோ செலவு செய்து தேவையான சௌகரியங்களை அந்த இடத்திலே செய்திருப்பார் இவர். உடனே காலி செய்து விட முடியுமா? 2020 மார்ச் முதல் கொரோனா வேறு. சாதாரண வீடு காலி செய்வதற்கே மூன்று மாதம் அவகாசம் தரும் பொது இது எப்படி உடனே செய்ய முடியும். நியாயம் ராசாவின் பக்கமே இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. மேலே செய்தியில் படித்தமட்டில் என் கருத்து இது......
Rate this:
blocked user - blocked,மயோட்
01-ஆக-202021:43:45 IST Report Abuse
blocked user"தேவையான சௌகரியங்களை அந்த இடத்திலே செய்திருப்பார் இவர்" - பிரசாத் ஸ்டுடியோ LV பிரசாத் குடும்பத்துக்கு சொந்தமானது. அதில் ஒரு பகுதியில் இந்த ரெகார்டிங் தியேட்டர் இயங்குகிறது (உலகத்தரத்தில் - வெகு நவீனமானது) அங்குள்ள கட்டமைப்பு பலருக்கு வாடகைக்கு விடப்படுகிறது. இது சைக்கிள் வாடகைக்கு எடுப்பது போல அல்ல....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X