பொது செய்தி

இந்தியா

மின் கட்டணம் ரூ. 2 லட்சம்: ஆஷா போஸ்லே போர்க்கொடி: நியாயப்படுத்துகிறது மின்வாரியம்

Updated : ஆக 01, 2020 | Added : ஆக 01, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement

மும்பை: ஜூன் மாத மின் கட்டணம் ரூ. 2 லட்சம் வந்துள்ளதற்கு பிரபல இந்தி திரைப்பட பின்னணி பாடகி ஆஷா போஸ்லே போர்க்கொடி உயர்த்தி உள்ளார். கட்டணம் சரியானது தான் என மகாடிஸ்காம் நியாயப்படுத்துகிறது.



latest tamil news




பிரபல இந்தி திரைப்பட பின்னணி பாடகியான ஆஷாபோஸ்லே .இவரது வீடு ஒன்று மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள மலைவாசஸ்தலமான லோனேவாலாவில் அமைந்துள்ளது. இவரது வீட்டிற்கான ஜூன் மாதத்திற்கான மின் கட்டணம் ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்து 870 ஆக பில் கட்டணத்தை மகாராஷ்டிரா மாநில மின்சார விநியோக நிறுவனம் (மகாடிஸ்காம்) அனுப்பி உள்ளது. மின்கட்டண உயர்வு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாடகி ஆஷா போர்க்கொடி உயர்த்தி உள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் இந்த வீட்டிற்கான ஏப்ரல் மாத மின்கட்டணம் ரூ.8,996.98 மற்றும் மே மாத மின் கட்டணம் ரூ.8,855.44 என வந்து கொண்டிருக்கும் போது ஜூன் மாதத்திற்கான கட்டணம் மட்டும் எவ்வாறு ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்து 870 ஆக அதிகரிக்கும் என கேட்டுள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள மகாடிஸ்காம் -ன் செய்தி தொடர்பாளர் ஆஷாவின் புகாரை அடுத்து புனே வட்டத்தை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் ஆஷாவின் வீட்டிற்கு சென்று மின்மீட்டரை சரி பார்த்துள்ளார். அப்போது மின் கணக்கை பதிவு செய்த நபர் சரியாகத்தான் பதிவு செய்துள்ளதாக அந்த மூத்தஅதிகாரி தெரிவித்து உள்ளதாக கூறினார்.


latest tamil news



இதனிடையே பாடகி ஆஷா போஸ்லே உயர்த்தப்பட்ட மின் கட்டணங்கள் குறித்து புகார்அளிப்பது இது முதல் முறை அல்ல எனவும்,கடந்த 2016 ம் ஆண்டில் மின் கட்டணம்உயர்த்தப்பட்ட போது புகார் கூறினார். அப்போதைய மாநில எரிசக்திதுறை அமைச்சர் சந்திரசேகர் பவன்குலே புகார் குறித்து ஆராயப்படும் என உறுதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்திலும் பிரபல நடிகர் பிரசன்னா தனது தந்தையின் வீட்டிற்கு மின் கட்டணம் வழக்கத்தை விட அதிகமான கட்டணம் வந்துள்ளது என்று புகார் கூறினார். அதற்கு தமிழக மின்வாரியம் மற்றும் அத்துறை அமைச்சரும் விளக்கம் அளித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
01-ஆக-202019:58:07 IST Report Abuse
தமிழ் மைந்தன் இதற்குத்தான் காங்கிரஸ்கம்பெனி ஆட்களின் வீட்டருகே வசிக்கக்கூடாது என கூறுகிறார்கள்..... ..
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
01-ஆக-202014:42:33 IST Report Abuse
Natarajan Ramanathan சென்னை அபிராமபுரத்தில் ஒரு மசாலா கம்பெனி மீட்டர் ஓடாததால் இஷ்டத்துக்கு செலவு செய்தார்கள். கண்டுபிடித்து 24 மணி நேரத்துக்குள் இரண்டு லட்சம் வரை கட்ட மின்வாரியம் நோட்டீஸ் கொடுத்த வுடன் வங்கிக்கு DD எடுக்க ஓடிவந்தார்கள்.
Rate this:
Cancel
R KUMAR - Oregon,யூ.எஸ்.ஏ
01-ஆக-202012:01:14 IST Report Abuse
R KUMAR பணம் காசு இல்லாதவர்கள், எனவே மின்வாரியத்தின் கோரிக்கையை எதிர்க்கிறார்கள். கருணை காட்டுங்கள்
Rate this:
sankar - Nellai,இந்தியா
01-ஆக-202013:20:51 IST Report Abuse
sankarபணம் காசு அவர்கள் உழைப்பில் வந்தது - சிலரைப்போல ஆட்டையை போட்டு வந்தது அல்ல தம்பி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X