பொது செய்தி

இந்தியா

வங்கிகள் கடன் தர மறுத்தால் எனக்கு புகார் அனுப்பலாம்: நிர்மலா

Updated : ஆக 01, 2020 | Added : ஆக 01, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
BJP, Nirmala, Nirmala Sitharaman, MSMEs, banks, bank loan, நிர்மலா,நிர்மலா சீதாராமன்

புதுடில்லி: 'வங்கிகள், தகுதியான நிறுவனங்களுக்கு கடன் வழங்க மறுத்தால், அது குறித்த புகாரை எனக்கு அனுப்பலாம்; நான் நடவடிக்கை எடுப்பேன்', என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நிர்மலா சீதாராமன், இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பேசியதாவது: ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள, விருந்தோம்பல் துறையினர், கடன் தவணை செலுத்துவதை மேலும் தள்ளி வைக்க வேண்டும் அல்லது கடன்களை மறுசீரமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர். இது, குறித்து, ரிசர்வ் வங்கியுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.


latest tamil news


மத்திய அரசு, 'ஆத்மாநிர்பார் பாரத்' திட்டத்தில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, அவசர கடன் உறுதி திட்டம் மூலம், மூன்று லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், சில வங்கிகள், உத்தரவாதமில்லாமல் வழங்கப்படும் அக்கடன்களை தர மறுப்பதாக, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

வங்கிகள், தகுதியான நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதை மறுக்கக் கூடாது. அவ்வாறு மறுத்தால், அது குறித்த புகாரை எனக்கு அனுப்பலாம். நான் நடவடிக்கை எடுப்பேன். தொழில் துறையின் அவசர கடனுக்கு, மேம்பாட்டு நிதி மையம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு. அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajas - chennai,இந்தியா
01-ஆக-202016:36:45 IST Report Abuse
Rajas பாலில் தங்கம் இருக்கிறது என்று உங்களின் கட்சி தலைவர் திலிப் கோஷ் சொல்லிய பிறகு அதை வைத்து கடன் பெற சென்ற ஒருவருக்கு ஒரு பேங்க் கடன் தரவில்லை. எனவே அவருக்கு உடனடியாக கடன் தர ஏற்பாடு செய்ய வேண்டும்.
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
01-ஆக-202013:58:43 IST Report Abuse
Tamilnesan உங்களுக்கு எப்படி புகார் மனு அனுப்புவது? எதாவது ஈமெயில் முகவரி, மொபைல் நம்பர் கொடுக்காமல் எப்படி புகார் அனுப்புவது?
Rate this:
Cancel
Rajan - Alloliya,இந்தியா
01-ஆக-202013:20:07 IST Report Abuse
Rajan Guarantee நீங்க குடுப்பேளா?
Rate this:
Girija - Chennai,இந்தியா
02-ஆக-202006:19:20 IST Report Abuse
Girijaஉனக்கு கருப்பர் கூட்டம் கொடுக்கும்,...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X