பொது செய்தி

இந்தியா

கணக்கில் காட்டாத தங்கத்திற்காக வருகிறது பொது மன்னிப்பு திட்டம்

Updated : ஆக 01, 2020 | Added : ஆக 01, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
Gold, Govt, forgiveness plan, தங்கம், பொது மன்னிப்பு, திட்டம்

புதுடில்லி: கணக்கில் காட்டாத தங்கம் வைத்திருப்போருக்கு, பொது மன்னிப்பு அளிக்கும் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து, மத்திய நிதி அமைச்சகம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

உலகிலேயே, இந்தியாவில் தான், தனியாரிடம் மிக அதிக அளவு தங்கம் உள்ளது. இந்திய குடும்பங்களில், 25 லட்சம் டன் தங்கம் இருப்பதாக ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. இதையடுத்து, தங்கம் இறக்குமதியை குறைக்கவும், வரி ஏய்ப்பை தடுக்கவும், பொது மன்னிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.


latest tamil news


இது குறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஏராளமானோரிடம் கணக்கில் காட்டாத தங்கம் உள்ளது. அவற்றை தாமாக முன்வந்து, வருமான வரித் துறையிடம் தெரிவித்து, உரிய வரி மற்றும் அபராதம் செலுத்தும், பொது மன்னிப்பு திட்டம் குறித்து, மத்திய நிதியமைச்சகம் பரிசீலித்து வருகிறது.இதன்படி கணக்கு காட்டுவோர் மீது, எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது. அதேசமயம், கணக்கில் காட்டப்படும் தங்கத்தின் ஒரு பகுதியை, குறிப்பிட்ட காலத்திற்கு 'டெபாசிட்' செய்யக் கோரும் விதிமுறை இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.rajagopalan - chennai ,இந்தியா
02-ஆக-202015:28:19 IST Report Abuse
s.rajagopalan பண மதிப்பீடு இழக்கும் திட்டதிற்கு ப சி போன்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையும் அபகரித்தால் ....மேலும் கூச்சல் வரும். ரூபாய் நோட்டு வெறும் காகிதம் ...தங்கம் பாதுகாக்கப்பட வேண்டும் .. வரி கட்டினால் போதும்
Rate this:
Cancel
Muguntharajan - Coimbatore,இந்தியா
02-ஆக-202008:59:55 IST Report Abuse
Muguntharajan இத விட்டுவிட்டு தங்கத்தின் விலையேற்றத்த கட்டுப்படுத்த ஏதாவது சட்டம் கொண்டு வந்தா நல்லது. ஒவ்வொரு நபருக்கும் ஒரு குறிப்பிட்ட எடை தங்கம் மலிவான விலையில் ரேசன் முறையில் வழங்க வேண்டும்.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
02-ஆக-202001:29:09 IST Report Abuse
தல புராணம் //தாமாக முன்வந்து, வருமான வரித் துறையிடம் தெரிவித்து, உரிய வரி மற்றும் அபராதம் செலுத்தும், பொது மன்னிப்பு திட்டம் // இப்ப இருக்குற லஞ்சம் போதாது, இன்னும் அதிகம் கொடுக்கலைன்னா அவ்வளவு தான் என்கிற "பொது மிரட்டல்" என்று தான் இதை பாக்கணும்.. கருப்புப்பணத்தை வளர்ப்பதே அரசும், அரசு ஊழியர்களும், அரசியல்வியாதிகளும் தான்.. அதில் எந்த மாற்றமும் இல்லை..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X