ஆவணங்களை திருத்தி ரூ.1 கோடி மோசடி: நகராட்சி கமிஷனர் உள்பட 6 பேர் சஸ்பெண்ட்| Dinamalar

தமிழ்நாடு

ஆவணங்களை திருத்தி ரூ.1 கோடி மோசடி: நகராட்சி கமிஷனர் உள்பட 6 பேர் 'சஸ்பெண்ட்'

Added : ஆக 01, 2020
Share

குளித்தலை: கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சியில், 2019-20ம் ஆண்டுக்கான, வருடாந்திர தணிக்கை ஆய்வு நடந்து வருகிறது. இதில், பல்வேறு கணக்குகளில் மோசடி நடந்துள்ளதாக தணிக்கை அதிகாரிகள் கூறியதையடுத்து, உள்ளாட்சி நிர்வாக, 'அக்கவுன்ட்ஸ் ஆடிட்' உதவி இயக்குனரும், நகராட்சிகளின் மண்டல இயக்குனருமான அசோக்குமார் விசாரணை மேற்கொண்டார். இதில், நகராட்சியில் அக்கவுன்டன்ட் ஆக பணியாற்றும் சத்யா,57, அரசு ஆவணங்களை திருத்தி, சி.பி.எஸ்.,- பி.எப்., நகராட்சி நிர்வாக நிதி போன்றவற்றில், ஒரு கோடி ரூபாய்க்கும் மேல், பாலமுருகன், எல்.பாலாஜி, ஆர்.சுப்பிரமணி, எஸ்.சுப்பிரமணி என்ற இல்லாத நபர்களின் பெயர்களில், 'செக்' மூலம் மோசடி செய்துள்ளதாக தெரிய வந்தது. இதையடுத்து, நகராட்சி கமிஷனர் மோகன்குமார், கரூர் குற்றப்பிரிவில் கொடுத்த புகாரை தொடர்ந்து, வழக்கு பதிவு செய்யப்பட்டது. சத்யா தலைமறைவானார். இந்நிலையில், இந்த விவகாரத்தில், கமிஷனர் மோகன் குமார், 52, நகராட்சி முன்னாள் பொறியாளரும், பொறுப்பு கமிஷனரும், தற்போது, சென்னை நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் பணிபுரிந்து வருபவருமான கார்த்திகேயன், 57, தற்போதைய பொறியாளர் புகழேந்தி, 57, அலுவலர்கள் சரவணன், 48, யசோதாதேவி, 55, சத்யா ஆகியோரை, 'சஸ்பெண்ட்' செய்து, நகராட்சி நிர்வாக ஆணையரக தலைவர் பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X