விசா நடைமுறை கடுமையாக்கப்படும்: அமெரிக்க குடியேற்றத் துறை அறிவிப்பு

Updated : ஆக 01, 2020 | Added : ஆக 01, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
H1B, Visa, US, எச்1பி, விசா, நடைமுறை, குடியேற்றத்துறை, அமெரிக்கா

வாஷிங்டன்: 'அமெரிக்காவில் பணியாற்ற வழங்கப்படும், 'எச் -- 1பி' உள்ளிட்ட இதர வேலை வாய்ப்பு விசாக்கள் பெறுவதில், துஷ்பிரயோகம் மற்றும் மோசடிகளை தவிர்ப்பதற்காக, தேர்வு முறை கடுமையாக்கப்பட்டுள்ளது' என, அந்நாட்டு குடியேற்றத் துறை தெரிவித்துள்ளது.

மென்பொருள் இன்ஜினியர்கள் உள்ளிட்ட, தனிச்சிறப்பு வாய்ந்த துறை நிபுணர்கள், அமெரிக்கா சென்று பணியாற்ற, எச் - -1பி விசா வழங்கப்படுகிறது. இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்களின் ஆயிரக்கணக்கான ஊழியர்களை, எச் -- 1பி விசா வாயிலாக, அமெரிக்கா அனுப்பி வைக்கின்றன. இந்த விசாவை நம்பித்தான், பல மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனங்கள், அமெரிக்க நிறுவனங்களுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், 'அமெரிக்காவில், 'கொரோனா' வைரஸ் பரவலால், கோடிக்கணக்கானோர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.


latest tamil news


'அவர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்யும் வகையில், வெளிநாடுகளில் இருந்து வேலை பார்க்க வருவோருக்கான விசாக்கள், இந்தாண்டு இறுதி வரை நிறுத்தி வைக்கப்படும்' என, அமெரிக்க அரசு, சமீபத்தில் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளது. இந்நிலையில், அமெரிக்க தொழிலாளர்களின் நலனை மனதில் கொண்டு, விசா வழங்குவதில், பல கடுமையான விதிமுறைகள் மற்றும் மாற்றங்களை செய்துள்ளதாக, அமெரிக்க குடியேற்றத் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து, அமெரிக்க குடியேற்ற சேவைகளுக்கான துணை இயக்குனர் ஜோசப் எட்லோ, பார்லி., விசாரணை குழு முன், நேற்று முன்தினம் கூறியதாவது: எச் -- 1பி விசா வழங்க வசூலிக்கப்படும் கட்டணங்கள், அமெரிக்க தொழிலாளர்களை பயிற்றுவிக்க பயன்படுத்தப்படுவது உறுதி செய்யப்படும்.


latest tamil news


இந்த விசாவுக்கான தேர்வு முறையில் மாற்றங்கள் கொண்டு வரப்படும். உள்நாட்டு பல்கலைக்கழகங்களில், முதுகலை அல்லது அதற்கு நிகரான மேற்படிப்பு முடித்தவர்களுக்கு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.பார்லி., குழு அறிவுறுத்தியபடி, நடப்பு நிதியாண்டில், 65 ஆயிரம், எச் -- 1பி விசாக்கள் மட்டுமே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதில், முதல், 20 ஆயிரம் விசாக்கள், அமெரிக்க பல்கலையில், உயர் படிப்பு முடித்தவர்களுக்கு வழங்க, முன்னுரிமை அளிக்கப்படும்.நீதித் துறையுடன் இணைந்து, போலி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வேலைவாய்ப்பு விசாக்கள் பெறுவதில், துஷ்பிரயோகம் மற்றும் மோசடிகளில் ஈடுபடும் நிறுவனங்களை கண்டறிந்து, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
01-ஆக-202017:58:57 IST Report Abuse
வெகுளி மணவாடுகள் இதில் கில்லாடிகள்.....
Rate this:
Cancel
மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா திருடிய நிலத்தில் இன்று முரட்டுத்தனமான நாட்டாமை. அதிக மோசடிகள் செய்து பெறப்படும் விசாக்களில் எச்-1 பி யும் ஒன்று. மோசடிகள் செய்வது அமெரிக்க அரசும் கூட தான். தேவை என்றால் குலுக்கல் முறையில் இஷ்டத்துக்கு விசாவைக்கொடுக்க வேண்டியது, தேவை இல்லை என்றால் அமெரிக்க மக்களின் நலன் என்று கூறுவது வாடிக்கை ஆகிவிட்டது. ஏற்கனவே மென் பொருள் துறை வேலைக்கு அங்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ள நிலையில் இது போன்ற செயல்பாடுகள் அவர்களுக்கு எதிர்மறை விளைவுகளையே ஏற்ப்படுத்தும். அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கு அதிகம் வேலை தேவைப்படுவது வால்மார்ட் போன்ற இடங்களில் தான். மேலும் அங்கு கொடுக்கும் கூலி மிகவும் குறைவு. அதற்கு ஒரு வழி செய்யாமல் இந்தியர்களை மட்டும் குறி வைத்து இதுபோல் செய்வது வெறும் கண் துடைப்பு ஏமாற்று நாடகம். நடக்காது என்றால் நம் இளைஞர்கள் ஆசையே பட மாட்டார்கள். படிப்பதற்கு செல்பவர்கள் முதல் இரண்டு வருடங்கள் அங்கு பெரிதாக எதையும் சாதிக்க முடிவது இல்லை.
Rate this:
Cancel
S.Ganesan - Hosur,இந்தியா
01-ஆக-202010:15:23 IST Report Abuse
S.Ganesan இப்போது அமெரிக்காவுக்கு போக ஒருவரும் விரும்பவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X