பொது செய்தி

இந்தியா

கருப்பர் கூட்டத்தை கண்டிக்க இவ்வளவு தாமதமா...

Updated : ஆக 01, 2020 | Added : ஆக 01, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
black crowd, lord murugan, religion, karthi, congress, dmk, bharathi, bjp, vanati srinivasan, vasan, rajendra balaji

'முருகப் பெருமானின் பெயர் கொண்ட நீங்கள், கார்த்திகேயனுக்கு இழுக்கு என்றால் பொறுத்துக் கொள்வீர்களா... 'ரொம்ப' சீக்கிரமா, 'வாய்ஸ்' குடுத்திருக்கீங்களே...' என, கிண்டலாக கேட்கத் துாண்டும் வகையில், காங்., - எம்.பி., கார்த்தி பேட்டி:

சமீபத்தில், கந்த சஷ்டி கவசம் குறித்த, 'கருப்பர் கூட்டம்' அமைப்பின் விமர்சனத்தை கண்டிக்கிறேன். எந்தக் கடவுளையும் இழிவுபடுத்தும் செயலை ஏற்க முடியாது. கொச்சைப்படுத்தியவர்கள் யாராக இருந்தாலும், சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

'வரைவு அறிக்கை தானே என்று கூட, வாளாவிருக்க மாட்டீர்கள் போலிருக்கிறது; கடும் எதிர்ப்பை பதிவு செய்கிறீர்களே...' என, கூறத் தோன்றும் வகையில், தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை:

சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீட்டு வரைவு அறிக்கையை, மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். பார்லிமென்ட், சட்டசபை ஒப்புதல் இல்லாமல், இதுபோன்ற சட்டத் திருத்தத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது.

'இடஒதுக்கீடு விவகாரத்திலிருந்து தமிழக எதிர்க்கட்சிகள் இன்னும் வெளி வரவில்லை. எனவே, அடுத்த சில நாட்களில் கல்வித்துறை எதிர்ப்பு கிளம்ப வாய்ப்பு உள்ளது...' என, ஆரூடம் கூறத் தோன்றும் வகையில், தமிழக, பா.ஜ., துணைத் தலைவர் வானதி சீனிவாசன் பேட்டி:


latest tamil news
மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை, கல்வியாளர்கள், மக்களிடம் கருத்து கேட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய கல்வித்துறையில் மிகப்பெரிய சீர்திருத்தம் இது. அடுத்த நுாற்றாண்டுக்கான அடித்தளத்தை ஏற்படுத்தும்.

'எவ்வளவு மெலிதாக, பக்குவமாக கோரிக்கை வைக்கிறீர்கள்; உங்களிடம், தி.மு.க., - கம்யூ.,க்கள் படிக்க வேண்டும்...' என, பாராட்டத் துாண்டும் வகையில், த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை:

சுற்றுச்சூழல் தாக்க வரைவு மசோதாவில் காணப்படும் அம்சங்கள், இயற்கை வளங்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது. அதற்கேற்ப நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

'இடஒதுக்கீடு பெற்றுத் தந்த வீரரே என, தி.மு.க.,வினர் பாராட்டி வருகின்றனர். நீங்கள் இப்படி சொல்கிறீர்களே...' என, அதிர்ச்சி தெரிவிக்க துாண்டும் வகையில், தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிக்கை:

யார் பெற்ற பிள்ளைக்கு, யார் உரிமை கோருவது... இடஒதுக்கீடு தொடர்பாக, வழக்கை தொடுத்து, வாதாடி வென்றது, அ.தி.மு.க., ஆனால், அதற்கு உரிமை கோருவது, தி.மு.க., அதற்கு சொந்த புத்தியும் இல்லை; உழைப்பும் இல்லை. அன்று முதல் இன்று வரை ஒட்டுண்ணி அரசியல் செய்கிறது, அக்கட்சி!

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.rajagopalan - chennai ,இந்தியா
02-ஆக-202015:32:11 IST Report Abuse
s.rajagopalan பலே சைக்கிள் காப் லே கார்த்தி நல்ல பேர் வாங்க ஒரு பிட் போட்டிருக்கிறார் ஆனால் ஐ என எக்ஸ் கேஸ்.... கேஸ் தான் கோரொனா போவட்டும் மியூசிக் ஸ்டார்ட் ஆகிவிடும்
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
01-ஆக-202020:15:52 IST Report Abuse
Bhaskaran இவனெல்லாம் ஒருமக்கள் பிரதிநிதி .
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
01-ஆக-202019:18:36 IST Report Abuse
Endrum Indian இந்திய ஜல்லடை ஓட்டை சட்டம் இருக்கும் வரை இப்படித்தான் நடக்கும் "தவறு கண்டேன் சுட்டேன் "என்று சட்டத்தை மாற்றினால் தான் இந்த தண்டகருமாந்திரங்கள் ஒழிந்து நாடு நலம் பெரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X