பொது செய்தி

இந்தியா

வெப் சீரிஸ்களுக்கு இனி எங்களிடமும் சான்றிதழ் பெற வேண்டும்: பாதுகாப்பு அமைச்சகம் கடிதம்

Updated : ஆக 01, 2020 | Added : ஆக 01, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
Web Series, Army, Defence Ministry, வெப் சீரிஸ், ராணுவம், தடையில்லா சான்றிதழ், திரைப்படம், பாதுகாப்பு அமைச்சகம்

புதுடில்லி: ராணுவத்தை மையப்படுத்தியுள்ள திரைப்படங்கள், வெப் சீரிஸ்களுக்கு தங்களிடமும் தடையில்லா சான்றிதழ் பெற நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு பாதுகாப்பு அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

தற்போது ஓடிடி தளங்களில் வெப் சீரிஸ் வெளியாகி மக்களிடையே மிகவும் பிரபலமாகி வருகிறது. நேரடியாக ஓடிடி வெளியிடும் திரைப்படத்திற்கும், வெப் சீரிஸ்-க்கும் தணிக்கை செய்யப்படுவதில்லை. இதனால் பிறரை இழிப்படுத்தும் விதமாகவும், ஆபாசமாகவும், தொடர்ந்து வெப் சீரிஸ்கள் வெளிவருகின்றன. இதற்கும் தணிக்கை வேண்டும் என பல தரப்பும் குரல் கொடுத்து வருகின்றன.


latest tamil news


அந்த வகையில் எக்தா கபூர் தயாரித்துள்ள ‛டிரிபிள் எக்ஸ் அன்சென்சார்டு - சீசன் 2' என்ற பெயரில் ஒரு வெப் சீரிஸ் வெளியாகியுள்ளது. இதில் நாட்டுக்காக பணியாற்றும் ராணுவ வீரர் எல்லையில் உள்ள போது அவர் மனைவி வேறொரு ஆணுடன் பழக்கம் வைத்திருப்பது போல் காட்சிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் ஒரு காட்சியில் அசோக சக்கர முத்திரையுடன் உள்ள ஒரு ராணுவ சீருடையைக் கிழிப்பது போல் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இதையொட்டி தயாரிப்பாளர் மீது முன்னாள் ராணுவ வீரர் டிசி ராவ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.


latest tamil news


இந்நிலையில், ராணுவத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்கள், வெப் சீரிஸ்களில் இந்திய ராணுவத்தை அவமதிப்பது போன்ற காட்சிகள் இடம்பெறுவதை தவிர்க்கும் பொருட்டு, இனி இவற்றை வெளியிடுவதற்கு முன், தங்களிடமும் தடையில்லா சான்றிதழ் வாங்க நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.ராணுவம் குறித்த தவறான செய்திகளை வெளியிடுவதைத் தடுக்கவும், ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் மனதைக் காயப்படுத்தாமல் தவிர்க்கவே இதை வலியுறுத்துவதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elakkumanan - Naifaru,மாலத்தீவு
01-ஆக-202017:11:07 IST Report Abuse
elakkumanan தொலைக்காட்சி விவாதங்களுக்கும் தணிக்கை அவசியம் என்பதே நாட்டுக்கு நல்லது. எங்க டாஸ்மாக் மாநிலத்தில், சில ஓசி பிரியாணி யாசகர்கள், தங்களை எல்லாமே அறிந்த தெரிந்த முட்டு சத்துக்களாக நினைத்து பேத்துவதும் , அதை என்னருமை டாஸ்மாக் கூட்டம் வாயில் ஈ வந்து குடும்பம் நடத்துவதுடன் கழிவறையாய் பயன்படுத்துவது கூட தெரியாமல் சோம பாண மயக்கத்தில் ரசிப்பதுவும் நாடு நலனுக்கு உகந்தது அல்ல.................... அரை போதை கூட்டத்தை அரை வேக்காடுகள் தவறாக கிளப்பிவிடுகிறார்கள் ..................இதெல்லாம் எப்பவோ செஞ்சிருக்கணும் ............................ திருட்டு காசி, திருட்டு டிவி, திருட்டு ரேடியோ, திருட்டு செய்தி தாள் களின் தினசரி கடமையே இதுதானே................... சுயம் இழந்த கூட்டம்......................விதை நெல்லை விற்று சரக்கடிக்கும் கூட்டம் இதெல்லாம் தெரியாமலே, ஊரடங்கு முடிஞ்ச ஒடனே, கருப்பு பலூனை ஊதிக்கொண்டு எங்கள் தென்மாநில லெக் தாதா , சொரியாரின் சொத்துக்களின் அதிபதி, தீய சக்தியின் திருட்டு சொத்துக்களின் வாரிசு தலைமையில் போராட கெளம்பீடுவானுவோ........................................பிரியாணி கடைகள் தான் பாவம்....................தணிக்கையை எல்லையை விரிவு படுத்துங்க...........................
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
01-ஆக-202016:20:01 IST Report Abuse
sankaseshan Good decision by the government of India . Most of the TV serials in TN encourage anti-national feeling . Some of the serials show adult only sencens in movies spoiling our culture . The act should be implemented as early as possible .
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
01-ஆக-202016:14:10 IST Report Abuse
Darmavan முதலில் பேச்சுரிமை என்பதற்கே கட்டுப்பாடு வேண்டும். ஹிந்து மதத்தை அது சார்ந்த விஷயங்களை பழிப்பது கடுந்தண்டனை குற்றமாக்கப்பட வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X