அமெரிக்காவில் விமானங்கள் மோதியதில் 7 பேர் பலி

Updated : ஆக 01, 2020 | Added : ஆக 01, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Alaska, plane crash, us plane crash, alaska plane crash,
 அமெரிக்கா, அலாஸ்கா, இரு சிறிய ரக, விமானங்கள், மோதியது, 7பேர், பலி

அலாஸ்கா: அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் இரு சிறிய ரக விமானங்கள் மோதிக்கொண்டதில் 7 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சால்டோட்னா விமான நிலையம் அருகே நடுவானில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் விமானத்தை தனியாக ஓட்டிச்சென்ற அலாஸ்கா மாகாண உறுப்பினர் கேரி நோப் (67) உயிரிழந்தார். குடியரசு கட்சியை சேர்ந்த இவரின் மறைவுக்கு, பலரும் இரங்கல் தெரிவித்தனர்.


latest tamil news


மற்றொரு விமானத்தில் இருந்த 4 சுற்றுலா பயணிகள், வழிகாட்டி, விமானி என 6 பேரும் உயிரிழந்தனர். அவர்களில் சால்டோட்னாவைச் சேர்ந்த பைலட் கிரிகோரி பெல்(57), கன்சாஸைச் சேர்ந்த டேவிட் ரோஜர்ஸ் (40), தென் கரோலினாவைச் சேர்ந்த காலேப் ஹல்சி(26), ஹீதர் ஹல்சி(25), ஓல்ட் மேக்கே ஹல்சி(24) மற்றும் கிர்ஸ்டின் ரைட் (23) என அடையாளம் காணப்பட்டுள்ளது. விபத்து குறித்து எப்.ஏ.ஏ மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரித்து வருகின்றன.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Radhakrishnan - Pune,இந்தியா
01-ஆக-202014:30:17 IST Report Abuse
Radhakrishnan வானத்தில் டிராபிக் சிக்னல் இல்லாததாலும் மோதிக் கொண்டு விட்டன இனிமேல் வானத்தில் டிராபிக் சிக்னல் நிறுவுவதற்கு ஒரு காண்டிராக்டர் ஏற்பாடு செய்ய வேண்டும்
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
02-ஆக-202001:31:22 IST Report Abuse
தல புராணம்"அம்பானி டிராபிக் சிக்கனல்" சுக்கு இந்திய விமான டிராபிக் கண்ட்ரோல் ஒப்பந்தம் தரப்படும். மோசடி அறிவிப்பு.. ஹா ஹா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X