தமிழ் உள்ளிட்ட 14 இந்திய மொழிகளில் பிரசாரம் செய்ய பிடேன் திட்டம்

Updated : ஆக 01, 2020 | Added : ஆக 01, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
Indian Languages, Joe Biden, Campaign, President Election, Indian American, Voters, Tamil, Hindi, election, ஜோ பிடேன், அமெரிக்கா, அதிபர், தேர்தல், பிரச்சாரம், இந்திய மொழிகள், தமிழ், ஹிந்தி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பிடேன், இந்தியர்களின் ஓட்டை பெறுவதற்காக தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 14 இந்திய மொழிகளில் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

அமெரிக்காவில் வரும் நவ.,3ம் தேதி அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக குடியரசு கட்சி சார்பில், தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடேன் போட்டியிடுகிறார். அமெரிக்க மக்கள் தொகையில் சுமார் 28 லட்சம் இந்தியர்கள் உள்ளனர். இதனால் அதிபர் தேர்தலில் இந்தியர்களின் ஓட்டு, முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியர்களின் ஓட்டை தன் பக்கம் இழுக்க டிரம்ப், பிடேன் கட்சிகள் கடும் போட்டிப்போடுகின்றன.


latest tamil news


இதன் விளைவாக பிடேனின் பிரசாரக் குழு, தனது பெரிய அளவிலான பிரசாரத் திட்டத்தை 14 இந்திய மொழிகளில் தொடங்குவதாக அறிவித்துள்ளது. இதில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, பஞ்சாபி, பெங்காலி, உருது, கன்னடம், மலையாளம், ஒரியா, மராத்தி உள்ளிட்ட மொழிகளும் அடங்கும். இதற்காக இந்திய அரசியலில் குறிப்பிடப்படும் சில வாக்கியத்தை பயன்படுத்தி, ‛அமெரிக்கா கா நேதா கைசா ஹோ, ஜோ பிடன் ஜெய்சா ஹோ' (அமெரிக்காவின் தலைவர் பிடனைப் போல இருக்க வேண்டும்) என்ற பிரசார முழக்கத்தை உருவாக்கியுள்ளது. இதே போல் பல வாக்கியங்களை கைவசம் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.


latest tamil news


அமெரிக்க தேர்தலில் இந்திய அரசியலில் பயன்படுத்திய வார்த்தைகள் இருப்பது இது முதன்முறையல்ல, கடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப், ‛ஆப் கி டிரம்ப் சர்க்கார்' என்னும் முழக்கத்தை முன்வைத்து பிரசாரம் மேற்கொண்டார். இந்த வாக்கியம் இந்திய பிரதமர் மோடி ‛ஆப் கி மோடி சர்க்கார்' என பிரசார முழக்கத்தில் இருந்து உருவாக்கப்பட்டது. அந்த பிரசாரம் டிரம்பிற்கு தனித்துவமான வெற்றியாக மாறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthu Pandi - Al Ain,ஐக்கிய அரபு நாடுகள்
01-ஆக-202020:04:27 IST Report Abuse
Muthu Pandi டிரம்ப் ஒரு மெண்டல் தான் - அவருடைய சில கொள்கைகள் இனக்கலவரத்திற்கு வித்திடும். பைடேன் முற்றிலும் சரியான வேட்பாளர் இல்லை - ஆனால் இருவரில் பெட்டர் ஆப்ஷன் பைடேன் வெற்றி பெறுவதுதான் உலக நன்மைக்கு நல்லது.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
01-ஆக-202018:42:46 IST Report Abuse
S. Narayanan அமெரிக்கா மக்களுக்கு தெரியும் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று.
Rate this:
Cancel
kesavan u s a - new york,யூ.எஸ்.ஏ
01-ஆக-202016:57:19 IST Report Abuse
kesavan u s a இந்த தேர்தலில் டிரம்ப் தான்வெற்றி பெறுவார் ....
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
02-ஆக-202011:19:32 IST Report Abuse
meenakshisundaramஉண்மைதான் -ஆனா பாடன் மேலப்பாளைய வாக்குகளுக்காக துடிக்கிறார்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X