பொது செய்தி

இந்தியா

விருப்ப மொழி பட்டியலில் இருந்து சீன மொழி நீக்கம்

Updated : ஆக 01, 2020 | Added : ஆக 01, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
Chinese Language, Removed, NEP 2020, Optional Language, New Education Policy, NEP, india, china, சீனா, மொழி, விருப்ப பாடம், நீக்கம், புதிய கல்விக் கொள்கை

புதுடில்லி: புதிய கல்விக் கொள்கையில் விருப்பத் தேர்வான வெளிநாட்டு மொழிகள் பட்டியலில் இருந்து சீன மொழியான மாண்டரின் நீக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை சமீபத்தில் வெளியிட்டது. புதிய கல்விக் கொள்கையின்படி, பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை பின்பற்றப்பட உள்ளது. இதில் விருப்ப மொழித் தேர்வாக இந்திய மொழிகள் பலவும் பட்டியலிடப்பட்டுள்ளன. அதேபோல் வெளிநாட்டு மொழிகளான கொரியன், ஜப்பான், தாய், பிரென்ச், ஜெர்மன், ஸ்பானிஷ், போர்த்துகீஸ், ரஷ்யன் மொழிகளும் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு வெளியிடப்பட்ட புதிய கல்விக் கொள்கை வரைவில், வெளிநாட்டு மொழிகள் பிரிவில் பட்டியலிடப்பட்டு இருந்த சீன மொழியான மாண்டரின், தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையில் நீக்கப்பட்டுள்ளது.


latest tamil news


லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா - சீனா இடையே நிலவி வரும் பிரச்னை காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் டிக்டாக், ஹலோ உள்ளிட்ட சுமார் 100 சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ள நிலையில், விருப்ப மொழி பாடத்தில் இருந்து சீன மொழியான மாண்டரினும் நீக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SAPERE AUDE -  ( Posted via: Dinamalar Android App )
01-ஆக-202021:30:29 IST Report Abuse
SAPERE AUDE இது தவறான அணுகுமுறை. கல்வியில் அரசியலைக் கலப்பது தவறு. எந்த தேசத்திலும் ஆள்பவர்கள் மாறுவார்கள் ஆனால் அவர்களது தாய்மொழி மாறாது. எல்லா மொழிகளையும் கற்று அறிவை செம்மையாக்குவதே கல்வியின் குறிக்கோள்.
Rate this:
Cancel
Nalam Virumbi - Chennai,இந்தியா
01-ஆக-202021:02:10 IST Report Abuse
Nalam Virumbi Natesan Narayanan அப்போ ஏன் தமிழக அரசியல் வியாதிகள் நமது நாட்டில் அதிகம் பேசப்படும் ஹிந்தியை வேண்டாம் என்கிறார்கள்?
Rate this:
Cancel
01-ஆக-202020:36:27 IST Report Abuse
Ganesan Madurai அருமை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X