7 மாவட்டங்களில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு

Updated : ஆக 01, 2020 | Added : ஆக 01, 2020
Share
Advertisement
தமிழகம், மாவட்டங்கள், கனமழை, சென்னை வானிலை, சென்னை வானிலை மையம், Rain, Rainfall, Climate, Tamil Nadu, TN, TN News, Tamil Nadu News, Climate news, Districts, TN districts, India, Chennai, Weather

இந்த செய்தியை கேட்க

சென்னை: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கோவை, நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக 3 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்த பட்சமாக 26 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.


latest tamil news


கடந்த 24 மணி நேரத்தில் தாமரைப்பாக்கத்தில் 10 செ.மீ., பந்தலூரில் 9 செ.மீ., தேவாலா, பாலவிடுதியில் தலா 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
இன்று முதல் 5 நாட்களுக்கு மன்னார் வளைகுடா, அந்தமான் தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X