பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா சிகிச்சைக்கு ரூ.12 லட்சம்: தனியார் மருத்துவமனை மீது அரசு அதிரடி நடவடிக்கை

Updated : ஆக 01, 2020 | Added : ஆக 01, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
Corona Treatment, Private Hospital, Higher Fees, Govt, Action, Covid-19 in tn, corona, coronavirus, covid-19, corona update, coronavirus update, coronavirus treatment, corona cases in TN, corona crisis, covid 19 pandemic, tamil nadu, chennai, தமிழகம், கொரோனா, சிகிச்சை, 12 லட்சம், வசூல், தனியார், மருத்துவமனை, அரசு, நடவடிக்கை

சென்னை: கொரோனா சிகிச்சை மேற்கொண்ட நோயாளியிடம் 19 நாளுக்கு 12.20 லட்சம் ரூபாய் வசூலித்த தனியார் மருத்துவமனை மீது தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கபட்டவர்கள் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை மேற்கொள்ளலாம் எனவும், அதற்காக நோயாளிகளிடம் வசூலிக்கப்படும் கட்டணத்தையும் தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால் ஆரம்பகட்ட பரிசோதனை முதல் குணமடைந்து வீடு திரும்பும் போது நடந்தப்படும் சோதனை வரை அனைத்திற்கும் தனியார் மருத்துவமனைகள் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது.


latest tamil newsஇந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனா சிகிச்சை மேற்கொண்ட நோயாளியிடம் இருந்து 19 நாளுக்கு ரூ.12.20 லட்சம் வசூல் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அந்த தனியார் மருத்துவமனையின் கொரோனா சிகிச்சை அனுமதி ரத்து செய்து தமிழக சுகாதார துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி அதிகம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-ஆக-202021:39:00 IST Report Abuse
ஆரூர் ரங் Be Well என அழைத்து நோயாளியை BILL மூலம் WELL லுக்குள் தள்ளி விட்டு விட்டார்களே .( ஆஸ்பத்திரி பெயரை நான் சொல்லமாட்டேனே😉 )
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
01-ஆக-202020:11:51 IST Report Abuse
Bhaskaran சும்மா ஒரு மிரட்டல் இதில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு கட்டிங் அதிமுகவுக்கு போகுதாம்
Rate this:
Cancel
Somiah M - chennai,இந்தியா
01-ஆக-202020:09:00 IST Report Abuse
Somiah M மக்கள் நன்மை அடைய வேண்டுமானால் அரசு அந்த மருத்துவ மனையின் பெயரை அறிவித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் ..அப்படி செய்தால்தான் மக்கள் பயன் அடைவர் .இல்லை என்றால் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விடுவது போல ஆகிவிடும் . .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X