பொது செய்தி

இந்தியா

சவால்களை மாணவர்கள் வெல்வார்கள்: பிரதமர் மோடி

Updated : ஆக 01, 2020 | Added : ஆக 01, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Modi, Narendra modi, Pm narendra modi, Pm Modi, students, Young India, innovative solutions, மாணவர்கள், பிரதமர் மோடி, மோடி, நரேந்திரமோடி,மாணவர்கள், சவால்கள்,

புதுடில்லி : 24 மணி நேரமும் உழைத்து வரும் மாணவர்கள், பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறுகின்றனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உலகிலேயே முதல்முனறயாக நடத்தப்படும் ஆன்லைன் ஹேக்கத்தான் இறுதிச்சுற்றில் பிரதமர் மோடி ஆன்லைன் வாயிலாக உரையாற்றினார். புதுமையான பொருட்களை கண்டுபிடிப்பதை ஊக்குவிக்க ஆண்டுதோறும் ஹேக்கத்தான் நடத்தப்படும். இந்த ஆண்டின் இறுதிச்சுற்றில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியை மத்திய கல்வித்துறை அமைச்சகம், அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் ஏற்பாடு செய்யப்படுகிறது. தமிழகத்தில் கோவையில் இருந்தும் மாணவர்கள் கலந்து கொண்டனர். கோவையை சேர்ந்த மாணவியிடம் தமிழில் வணக்கம் எனக்கூறி மோடி தனது உரையை துவங்கினார்.


latest tamil news



தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது: இளைஞர்கள் சவால்களை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை கேட்க ஆர்வமாக உள்ளேன். மழை பொழிவை அறிந்து கொள்ளும் தொழில்நுட்பம் குறித்து கோவை மாணவி தெரிவித்தது விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். மாணவர்கள் 24 மணி நேரமும் உழைத்து வருகின்றனர். சவாலான காலகட்டத்தை மாணவர்கள் வெற்றிகரமாக கடந்து வருவார்கள்.

நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் அனைவருக்குமான சுகாதார வசதியை ஏற்படுத்துவதே இலக்கு. ஆயுஷ்மான் பாரத் திட்டம் கிராமங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. கிராமங்களில் உள்ள மருத்துவமனைகளை உலக தரத்திற்கு உயர்த்துவதே இலக்கு. சுகாதாரத்துறையில் உள்ள சவால்களுக்கு தரவுகள் அடிப்படையில் தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

போலீசாருக்கு உதவும் வகையில், கோவை பிஎஸ்ஜி கல்லூரியை சேர்ந்த மாணவர் ஒருவர் கருவி ஒன்றை தயாரித்துள்ளார். அவரிடம், எப்போதாவது போலீஸ் ஸ்டேசன் சென்றுள்ளீர்களா என பிரதமர் கேள்வி எழுப்பினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
01-ஆக-202018:14:55 IST Report Abuse
S. Narayanan சவால் இல்லாத வாழ்க்கை சுவை இல்லாத வாழ்க்கை ஆகும். இன்றைய மாணவர்கள் நிறைய படிக்கிறார்கள் மேலும் கணினி வாயிலாக நிறைய விஷயங்களை பெறுகிறார்கள். அதனால் அவர்கள் எந்த சவாலையும் எதிர் கொண்டு வெற்றி பெறுவார்கள் என்பது முற்றிலும் உண்மை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X