எத்தனை நாளுக்குத்தான் அரசு தூங்கப்போகிறது: பிரியங்கா

Updated : ஆக 01, 2020 | Added : ஆக 01, 2020 | கருத்துகள் (40)
Share
Advertisement
Priyanka, BulandshahrLawyer, Death, UP, JungleRaj, Growing, உத்தரபிரதேசம், உபி, பிரியங்கா, புலந்த்ஷெஹர், வழக்கறிஞர், கொலை, சட்டம் ஒழுங்கு

லக்னோ: உத்தர பிரதேசத்தில் வழக்கறிஞர் ஒருவர் மாயமாகி 8 நாட்களுக்கு பிறகு சடலமாக கண்டெடுக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய காங்., பொதுச்செயலர் பிரியங்கா, உ.பி.,யில் சட்டம் ஒழுங்கு மந்தமாக இருப்பதாகவும், எத்தனை நாட்களுக்குத்தான் இந்த அரசு தூங்கிக் கொண்டிருக்கப்போகிறது எனவும் விமர்சித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் புலந்த்ஷெஹர் வழக்கறிஞர் தர்மேந்திர சவுத்ரி, கடந்த ஜூலை 25ம் தேதி மாயமானார். இவர் கடத்தப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் அவரது இருசக்கர வாகனம் ஒரு இடத்தில் கவிழ்ந்து கிடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து அந்த பகுதியில் ட்ரோன்களை விட்டு தேடிய நிலையில், வழக்கறிஞரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.


latest tamil news


இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா, உ.பி.,யில் ஆளும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ., அரசை கடுமையாக விமர்சித்தார். அவர், டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: உத்தர பிரதேசத்தில் குற்றமும் கொரோனாவும் கையை மீறி போய்க்கொண்டிருக்கிறது. வழக்கறிஞர் தர்மேந்திர சவுத்ரி என்பவர் கடத்தப்பட்டு 8 நாட்கள் ஆன நிலையில் நேற்று அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. கான்பூர், கோரக்பூர், புலந்த்ஷெஹர் என்று ஒவ்வொரு சம்பவத்திலும் சட்டம் ஒழுங்கு மந்தமாக செயல்படுகிறது. எத்தனை நாட்களுக்குத்தான் இந்த அரசு தூங்கிக் கொண்டிருக்கப்போகிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
02-ஆக-202018:45:24 IST Report Abuse
madhavan rajan இந்திய மக்கள் பலகாலமாக தூங்கிக்கொண்டே தவறானவர்களுக்கு ஓட்டுப்போட்டார்கள். 2014 க்குப் பிறகுதான் விழித்துக்கொண்டு தவறானவர்களை ஒதுக்கி இருக்கிறார்கள். பொறுங்கள் அறுபது ஆண்டுகளாக காங்கிரஸ் செய்த அட்டூழியத்தையெல்லாம் களைந்து நல்லது செய்யவேண்டும் என்றால் சிறிது காலம் ஆகும். பாஜக ஆட்சியில் இருக்கும்வரை உங்கள் குடும்பம் கட்சித்தலைவர்களும் தூங்க முடியாது.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
02-ஆக-202016:48:54 IST Report Abuse
Endrum Indian எத்தனை நாளுக்குத்தான் அரசு தூங்கப்போகிறது: பிரியங்கா???அவர் கேட்பது என்னவென்றால் என் அன்னை தம்பி போன்ற எம் பிக்களை ஏன் காலி செய்யசொல்லவில்லை ஏன் அரசு தூங்குகின்றது இது தான் அதன் அர்த்தம். என்ன பியங்கா நான் சொல்றது சரிதானே.
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
02-ஆக-202008:27:09 IST Report Abuse
Darmavan உன் கட்சி வளர்த்த ஜிகாதி தீவிர வாதமே காரணம் .முளையிலேயே கிள்ள வேண்டிய தீவிரவாதி மரமாக வளர்த்து விட்டு இப்போது மற்றவர் மேல் பழி சொல்வது வஞ்சகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X