மெக்ஸிகோவில் அதிகரிக்கும் கொரோனா; அதிபருக்கெதிராகக் கிளம்பும் எதிர்க்கட்சிகள்

Updated : ஆக 01, 2020 | Added : ஆக 01, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
Mexico, ThirdHighest, DeathToll,  Covid-19, Govt, மெக்ஸிகோ, கொரோனா, பாதிப்பு, அதிபர், எதிர்க்கட்சிகள்

மெக்ஸிகோ: மெக்ஸிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ்-ன் கட்சியான இன்ஸ்டிடியூஷனல் ரெவல்யூஷனரி கட்சி கொரோனா தாக்கத்தை முன்னிட்டு கடும் எதிர்ப்பினை எதிர்க்கட்சிகளிடமிருந்து பெற்று வருகிறது.

அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா மற்றும் தென் ஆப்ரிக்காவை அடுத்து கொரோனா வைரஸ் தாக்கத்தில் மெக்ஸிகோ ஆறாவது இடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 688 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். இதனால் மெக்ஸிகோவில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 46 ஆயிரத்து 688 ஆனது. இதனால் பிரிட்டனின் பலி எண்ணிக்கையை மெக்ஸிகோ முந்தி கொரோனா உயிரிழப்பில் மூன்றாவது இடத்தில் உள்ளது. பிரிட்டனில் 46 ஆயிரத்து 119 பேர் கொரோனா வைரசுக்கு பலியாகியுள்ளனர்.


latest tamil news


ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. பிரிட்டனைக் காட்டிலும் மெக்ஸிகோ இருமடங்கு ஜனத்தொகை கொண்டது. இதுவரை மெக்ஸிகோவில் 4 லட்சத்து 24 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மெக்ஸிகோவில் கொரோனாவுக்கு எதிராக சரியான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என எதிர்க்கட்சியைச் சேர்ந்த 9 மாநில கவர்னர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
01-ஆக-202023:58:28 IST Report Abuse
தல புராணம் இந்தியாவில் தொற்று எண்ணிக்கை 17 லட்சத்தை தாண்டி 40,000 சாவுகளுடன் நமக்கு டவுசர் கிழிந்து தொங்குது.. அதை மறைச்சிட்டு மெக்சிகோவை பத்தி பேசும் அவலம்.
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
01-ஆக-202018:35:22 IST Report Abuse
Vijay D Ratnam அடர்த்தியான மக்கட்தொகை கொண்ட மெக்ஸிகோ சிட்டியை கொரோனா ஒரு காட்டு காட்டும் என்று பயந்தார்கள். இந்தா வந்துட்டுல்ல. டென்சிட்டி என்றால் 1 சதுர கிமீ யில் 6000 பேர் இதுல எங்கிட்டு சமூக இடைவெளி பின்பற்றுவது.
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
02-ஆக-202000:02:41 IST Report Abuse
தல புராணம்Chennai has a population density of 26,903 persons per square kilometre, மெக்சிகோவை போல நாலு மடங்கு அடர்த்தி.. முழு டைனோசோரை ஒரு மாஸ்க்குக்குள் மறைத்து பொய்க்கதை சொல்லி ரீல் விடுறாங்க. கட்டுக்குள் இருக்குன்னு.. இந்தியா பத்திக்கிட்டு எரியுது 17 லட்சம் தொற்றுக்களுடன்.. பின்னாலே பத்திக்கிட்டு எரியுது ஆனால் மொத்தமா அமுக்கிட்டு ராமர் கோவிலை தொறக்க போறாரு மூடர் கூட தலைவர்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X