பொது செய்தி

இந்தியா

ராஜ்யசபா எம்.பி., அமர்சிங் காலமானார்

Updated : ஆக 01, 2020 | Added : ஆக 01, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: ராஜ்யசபா எம்.பி.,யும், சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் நிர்வாகியுமான அமர்சிங், சிங்கப்பூர் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 64.கடந்த சில மாதங்களாக, கிட்னி தொடர்புடைய பிரச்னைகள் காரணமாக, சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு திருமணமாக மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.கடந்த 2011 ல் அமர்சிங்கிற்கு கிட்னி மாற்று
amar singh, Rajya Sabha MP, former SP leader, dead, Singapore, samajwadi party, mulayam singh, சமாஜ்வாதி, அமர்சிங், அமர்சிங், காலமானார்,

புதுடில்லி: ராஜ்யசபா எம்.பி.,யும், சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் நிர்வாகியுமான அமர்சிங், சிங்கப்பூர் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 64.

கடந்த சில மாதங்களாக, கிட்னி தொடர்புடைய பிரச்னைகள் காரணமாக, சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு திருமணமாக மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

கடந்த 2011 ல் அமர்சிங்கிற்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சமாஜ்வாதி கட்சி தலைவராக முலாயம் சிங் இருந்த வரை, அவருக்கு நெருக்கமானவராக அமர்சிங் இருந்தார். பின்னர் கட்சி, அகிலேஷ் வசம் சென்றதும், அமர்சிங் ஓரங்கட்டப்பட்டார். தொடர்ந்து 2010ல் சமாஜ்வாதியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார்.


latest tamil newsபின்னர் 2011ல் ராஷ்ட்ரீய லோக் மஞ்ச் என்ற கட்சியை துவக்கி, 2012 சட்டசபை தேர்தலில் களம் கண்டார். ஆனால், தோல்விதான் அவருக்கு பரிசாக கிடைத்தது. இதன் பின்னர் அஜித் சிங் கட்சியுடன் இணைந்து அமர்சிங் செயல்பட்டார்.


இரங்கல்

அமர் சிங் மறைவுக்கு, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் நிதின் கட்காரி இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நிதின் கட்காரி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், அமர் சிங் மறைவு கேட்டு சோகமடைந்தேன். அவரது ஆன்மா அமைதி பெறட்டும் என பதிவிட்டுள்ளார்.

ராஜ்நாத் சிங் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: அமர் சிங் மறைவு செய்தி கேட்டு வருத்தமடைந்ததாக தெரிவித்துள்ளார்.


பிரதமர் மோடி இரங்கல்


பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: அமர் சிங், திறமைமிக்க அரசியல்தலைவராக திகழ்ந்தார். அவருக்கு பல துறைகளிலும் நண்பர்கள் இருந்தனர். அவரது மறைவு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
02-ஆக-202007:47:13 IST Report Abuse
skv srinivasankrishnaveni பெஸ்ட் பார்லிமெண்டேரியன் RIP
Rate this:
Cancel
01-ஆக-202022:07:00 IST Report Abuse
kulandhai Kannan கடைந்தெடுத்த அரசியல் புரோக்கர். UPA ஆட்சியில் பல தகிடுதத்தங்கள் புரிந்தவர்.
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
01-ஆக-202022:02:13 IST Report Abuse
Tamilnesan இவர் நடிகை ஜெயப்ரதாவின் நெருங்கிய நண்பர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X