பொது செய்தி

இந்தியா

ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி பாதுகாப்புக்கு இளம் போலீசாரை பயன்படுத்த முடிவு

Updated : ஆக 01, 2020 | Added : ஆக 01, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement

அயோத்தி: அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமரின் பாதுகாப்புக்காக இளம் வயது போலீசாரை பயன்படுத்த உ.பி., அரசு முடிவு செய்துள்ளது.



latest tamil news



வரும் ஆக்ஸ்ட்5 ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது. இதில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர். விழாவில் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

இதையொட்டி கொரோனா முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வது தொடர்பாக உ.பி., மாநில தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாநில தலைமச் செயலாளர் ஆர்.கே.திவாரி மற்றும் கூடுதல் செயலாளர் ஆவானிஸ் குமார் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


latest tamil news



கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிரதமரின் பாதுகாப்பு பணிக்கு 45 வயதிற்கும் குறைவான கொரோனா பாதிப்பு இல்லாத தனிமைப்படுத்துதலில் உள்ள போலீசாரை மட்டுமே பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் வேந்தன் - சென்னை,இந்தியா
02-ஆக-202001:01:55 IST Report Abuse
தமிழ் வேந்தன் இனி பொருளாதாரத்தை கட்டுப்படுத்த முடியாது சும்மா GDP பிச்சிக்கிட்டு போகும்
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
02-ஆக-202000:30:58 IST Report Abuse
தல புராணம் ரோம் பத்திக்கிட்டு எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசிச்சானாம்..
Rate this:
PRSwamy - New York,யூ.எஸ்.ஏ
02-ஆக-202004:56:42 IST Report Abuse
PRSwamyஐயா என்ன திராவிடர் கழகமோ? சுடலை என்னமோ லண்டன் போணுமாமே? இந்தியால இல்லாத மருத்துவர்களா? என்ன சொல்லுரிக?...
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
02-ஆக-202000:03:18 IST Report Abuse
தல புராணம் முழு டைனோசோரை ஒரு மாஸ்க்குக்குள் மறைத்து பொய்க்கதை சொல்லி ரீல் விடுறாங்க. கட்டுக்குள் இருக்குன்னு.. இந்தியா பத்திக்கிட்டு எரியுது 17 லட்சம் தொற்றுக்களுடன்.. பின்னாலே பத்திக்கிட்டு எரியுது ஆனால் மொத்தமா அமுக்கிட்டு ராமர் கோவிலை தொறக்க போறாரு மூடர் கூட தலைவர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X