பொது செய்தி

இந்தியா

அயோத்தியில் ராமர் கோவில் பணிகள் குறித்து நாளை (ஆக.,2) உ.பி. முதல்வர் யோகி ஆய்வு

Updated : ஆக 01, 2020 | Added : ஆக 01, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

லக்னோ : அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணி தொடர்பான ஏற்பாடுகளை ஆக.,2 ல் உ.பி.,முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



latest tamil news



உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜைக்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ராமர் கோவில் பணிகள் குறித்து அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் (ஆக.,2) ல் ஆய்வு செய்ய அயோத்திக்கு வர உள்ளார். ஆக.,5 ம் தேதி அயோத்தி ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். இதனால் ஆக.,3 மற்றும் 4 தேதிகளில் உ.பி.,மாநிலத்தின் மதுரா, வாரணாசி, சித்ராகூட், பிரயாக்ராஜ் மற்றும் கோரக்பூர் , நைமிசாரண்யம் ஆகிய பல்வேறு இடங்களில் சிறப்பு பிராத்தனைகள் நடைபெறும். அகந்த் ராமாயணத்தின் நூல்களும் ஓதப்படும்.


latest tamil news



ராமர் கோவிலின் அஸ்திவார விழாவை கொண்டாட பல்வேறு முக்கிய புனிதயாத்திரை இடங்களில் கோலாகலமாக கொண்டாட்டங்கள் நடைபெறும். நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் இது தொடர்பாக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். ஜூலை 31 ல் ராமர் கோவில் விழாவிற்கு யமுனோத்ரி, யமுனை நதிகளில் இருந்து புனித நீர், இமயமலை பகுதியில் வளரும் பிரம்ம கமல் பூ, ஆகியவற்றை பூசாரிகள் விஷ்வா இந்து பரிஷத் அலுவலக பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்தனர். இது அயோத்திக்கு அனுப்பப்படுவது மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவிக்கப் பட்டது. அத்துடன் கங்கோத்ரி மண் மற்றும் கங்கை நதியின் நீர் ஆகியவையும் ராமர் கோவில் பணிக்கு அனுப்பப்படும்.

இது மட்டுமின்றி பல்வேறு நாட்டின் பல்வேறு புனித தலங்கள், கோவில்களில் இருந்தும் தீர்த்தம், மண், ஆடைகள், மலர்கள் உள்ளிட்ட பொருட்கள் அயோத்திக்கு அனுப்பப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பல மாநிலங்களின் முதல்வர்கள், மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundarsvpr - chennai,இந்தியா
01-ஆக-202020:45:22 IST Report Abuse
sundarsvpr கொரானா பாதிப்பு காலத்தில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறுவது ஒரு சவாலான காரியம். பெருபான்மையான மக்களின் உணர்வு நிறைந்த விழா. நேரில் கலந்துகொள்ள இயலாத நிலை. என்ன செய்வது எல்லாம் அவன் செயல்.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
02-ஆக-202005:49:29 IST Report Abuse
 Muruga Velஏழைகளுக்கு உதவுங்களேன் ... ஆயிரம் கோவில்களுக்கு அடிக்கல் நாட்டியதற்கு சமம் ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X