பொது செய்தி

இந்தியா

கோவாக்சின் பரிசோதனையில் மருந்து செலுத்தப்பட்டோர் நலமுடன் உள்ளனர்: மருத்துவர்கள் தகவல்

Updated : ஆக 01, 2020 | Added : ஆக 01, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
covaxin, corona, vaccine, doctors, test report, கோவாக்சின், கொரோனா, தடுப்பூசி, பரிசோதனை, முடிவுகள், மருத்துவர்கள், தகவல்

ஐதராபாத்: இந்தியாவிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி கோவாக்சின் மருந்து செலுத்தப்பட்ட அனைவரும் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக நாடுகளில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கொரோனா தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பு மற்றும் பரிசோதனையில் தீவிரமாக உள்ளனர். அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவில் ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்து ஆராய்ச்சி கவுன்சில் ஆகிய இரண்டும் இணைந்து கொரோனாவை குணப்படுத்த கோவாக்சின் என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளன. இம்மருந்தினை 12 வெவ்வேறு மருத்துவமனைகளில் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டது. அதன்படி காட்டாங்குளதத்தூர் எஸ்ஆர்எம் மருத்துவமனை உள்ளிட்ட 8 மருத்துவமனைகளில் பரிசோதனை செய்ய திட்டடமிடப்பட்டது.

உ.பி.,யில் உள்ள ரானா மருத்துவமனையில் மனிதர்களிடம் பரிசோதிக்கப்பட்டது. பரிசோதனைக்குட்பட்டவர்களை டாக்டர் அஜீத் பிரதாப் சிங் ஆய்வு செய்து வருகிறார். ஆய்வின் முடிவில் அனைவரும் பாதுகாப்பாகவும் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த திங்களன்று ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள எஸ்.யு.எம்.,மருத்தவமனையில் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அதில் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டதாகவும் பரிசோதனைக்குப்பின் அனைவரும் நலமுடன் இருப்பதாக டாக்டர் வெங்கட் ராவ் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் ரோடாக்கில் ஜூலை 17 ல் நடந்த பரிசோதனையில் 50க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர் இதில் அனைவரும் நலமுடன் இருப்பதாக டாக்டர் சவீதா வர்மா தெரிவித்தார்.


latest tamil news



முதற்கட்டத்தில் மொத்தம் 375 பேர் பரிசோதனையில் கலந்து கொண்டனர். மேலும் 3,500 தன்னார்வலர்கள் பரிசோதனைக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசோதனைக்கு உட்பட்ட அனைவரின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
03-ஆக-202009:04:35 IST Report Abuse
Sampath Kumar நம்புறோம்
Rate this:
Cancel
R.M.Muthu - Guangzhou,சீனா
02-ஆக-202011:05:39 IST Report Abuse
R.M.Muthu அருமை
Rate this:
Cancel
LetsVALUE.org - Democracy,இந்தியா
01-ஆக-202022:55:06 IST Report Abuse
LetsVALUE.org ஜெய் ஸ்ரீ ந்ருஸிம்ஹா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X