அனைவரின் சம்மதத்துடன் ராமர் கோவில் கட்டுமானம் : கமல்நாத்

Updated : ஆக 01, 2020 | Added : ஆக 01, 2020 | கருத்துகள் (28)
Share
Advertisement

போபால்: அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவதை வரவேற்கிறேன் என ம.பி., முன்னாள் முதல்வரும் காங்., கட்சியை சேர்ந்தவருமான கமல்நாத் கூறி உள்ளார்.



latest tamil news



இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவதை நான் வரவேற்கிறேன். நாட்டு மக்கள் நீண்ட காலமாக இதை விரும்புகின்றனர். எதிர்பார்க்கின்றனர். கோவிலின் கட்டுமானம் ஒவ்வொரு இந்தியரின் ஒப்புதலுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இது இந்தியாவில் மட்டுமே சாத்தியமாகும் என கூறி உள்ளார்.


latest tamil news



மேலும் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு தலைவரான திக் விஜய் சிங் கூறுகையில் எல்லோருடைய நம்பிக்கையின் மையத்திலும் கடவுள் ராமர் உள்ளார். நாடு ராமர் மீது நம்பிக்கையுடன் இயங்குகிறது. அதனால் தான் அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் ஒரு பெரிய கோயில் கட்டப்பட வேண்டும் என நாம் அனைவரும் விரும்புகிறோம் . முன்னாள் பிரதமர் ராஜிவ் இதையே விரும்பினார் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.



காங்,, தலைவர்களின் கருத்து குறித்து மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கூறுகையில் காங்., தான் கோவில் கட்டுமானத்தை தாமதப்படுத்த முயன்றது. அக்கட்சியில் இருக்கும் ஒரு சில பெரிய தலைவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் ராமர் ஒரு கற்பனையான பாத்திரம் என கூறி கொண்டே இருந்தனர்.

எதுஎப்படியாயினும் ராமர் நாட்டில் அனைத்து இடங்களிலும் இருக்கிறார். என கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mathimandhiri - chennai,இந்தியா
02-ஆக-202017:29:52 IST Report Abuse
mathimandhiri வடக்கில் இருப்பது இந்து விரோதம் என்று கூற முடியாது. நாட்டின் கலாச்சார பாரம்பரியம் அவர்களை திரித்துக்கூற வைக்காது. அரசியல் காரணங்களே தலை தூக்கும் அரசியல் காரணங்களுக்காகவே """"மதச்ச சார்பின்மை"""""யை அங்கே. கையில் எடுப்பார்கள். மேலும் அங்கு நாத்திகம், வெளிப்படையான இந்து விரோதக் கும்பல்கள், துவேஷக் கட்சிகள் கிடையாது. ராமர் படித்த பொறியியல் கல்லூரி எங்கே என்றெல்லாம் அவர்கள் கேட்டதில்லை. அங்கு ராமருக்கு அரசு மேற்பார்வையில் செருப்பு மாலை எல்லாம் போடப்பட வில்லை. இந்து மதக் கலாச்சாரத்தையும், குறிப்பிட்ட சமூகத்தை திட்டமிட்டு அழித்தொழிக்கும் வேலையில் அன்றாடம் ஈடுபட்டிருக்கும், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் முளைக்கும் வித விதமான ஈனக்கும்பல்கள் இங்கிருப்பது போல் அங்கு இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக நாத்திகம் தோன்றி வேரூன்றிய மண் அங்கு இல்லை. தேசத்து துரோக கலாச்சாரத் துரோக உள்ளூர் மொழிச் சேனல்கள் இல்லை.எனவே ராமர் கோவில் பற்றிய அவர்களது கருத்துக்கள் நம்பதத் தகுந்தவை தான்.
Rate this:
Cancel
Ramona - london,யுனைடெட் கிங்டம்
02-ஆக-202012:08:16 IST Report Abuse
Ramona பரவாயில்லையே மதம் பிடித்த கட்சியை சேர்ந்தஒரு தலைவருக்கு குடும்பத்தினர் நல்லது எது கெட்டது எது என்று தெரிகிறது.
Rate this:
Cancel
arudra1951 - Madurai,இந்தியா
02-ஆக-202009:47:26 IST Report Abuse
arudra1951 இன்னும் சில நாட்களில் இவன் பிஜேபியில் சேர்ந்து விடுவான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X