பொது செய்தி

இந்தியா

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 53,648 பேர் மீண்டனர்

Updated : ஆக 01, 2020 | Added : ஆக 01, 2020
Share
Advertisement
karnataka, corona, recovered, positive, toll, bangaluru, corona, coronavirus, covid-19, corona cases, corona update, coronavirus update, corona cases worldwide, corona crisis, covid 19 pandemic, worldwide crisis, coronavirus count, corona toll, corona India, கர்நாடகா, கொரோனா, மீண்டனர், பாதிப்பு, பலி, பெங்களூரு

பெங்களூரு: கர்நாடகாவில் கொரோனா பாதித்தவர்களில் 53,648 பேர் குணமடைந்துள்ளனர்.

மாநிலத்தில் மொத்தம் 73,219 பேர் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 602 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

இருப்பினும் நேற்று ஒரே நாளில் புதிதாக அங்கு 5,172 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து மாநில அளவில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,29,287 ஆக உயர்ந்தது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 98 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 2,412 ஆக அதிகரித்துள்ளது. பெங்களூருவில் மட்டும் புதிதாக 1,852 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகினர். ஒரே நாளில் பெங்களூருவில் மட்டும் 27 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.


latest tamil news



மாநிலத்தில் மொத்தம் 53,648 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்ததையடுத்து அங்கு கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் விகிதம் 41.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X