அக்டோபரில் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி ; ரஷ்யா திட்டம்

Updated : ஆக 01, 2020 | Added : ஆக 01, 2020
Share
Advertisement

மாஸ்கோ : ரஷ்யாவில் கொரோனா தொற்றை எதிர்ப்பதற்கான தடுப்பூசி அக்., மாதத்தில் தயாராகும் என அந்நாட்டு சுகாதாரதுறை தெரிவித்தது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த இந்தியா, சீனா, பிரிட்டன் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் தொற்றுக்கான தடுப்பூசி கண்டறியும் சோதனை நடந்து வருகிறது. தடுப்பூசிக்கான பரிசோதனையில், பல நாடுகளும் தற்போது மனிதர்களுக்கான பரிசோதனையில் (HumanTrial) உள்ளன. ரஷ்யாவிலும் கொரோனா தொற்றை எதிர்ப்பதற்கான தடுப்பூசி தொடர்பான பணிகளில் அந்நாட்டு விஞ்ஞானிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். அக்டோபரில் இதற்கான தடுப்பூசி (Vaccine) தயாராகும் என ரஷ்யா தெரிவித்துள்ளது,

இது தொடர்பாக ரஷ்யாவின் சுகாதாரதுறை கூறுகையில், ரஷ்யாவில் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி தயாரிக்கும் பணி சிறப்பான கட்டத்தில் உள்ளது. மாஸ்கோவில் உள்ள மாநில ஆராய்ச்சி நிலையமான கமலேயா நிறுவனம் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளை பெரும்பாலும் முடித்துவிட்டது. அதனை பதிவு செய்வதற்கான ஆவணங்களுக்கான வேலைகள் நடந்து வருகின்றன. மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்படும். அக்., மாதத்தில் தொற்றுக்கான தடுப்பூசியை திட்டமிட்டுள்ளோம். இது விரைவில் உள்ளூர் ஒழுங்குமுறை ஒப்புதலை பெறும் மற்றும் விரைவில் சுகாதார பணியாளர்களுக்கு வழங்கப்படும்.


latest tamil news



கமலேயா நிறுவனம் அடினோவைரஸ் சார்ந்த தடுப்பூசியை உருவாக்கி வருகிறது. ரஷ்யாவில் கொரோனா தொற்றுக்கு புதிதாக 5,462 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் ஒரே நாளில் 95 பேர் பலியாகியுள்ளனர். நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 8,45,443 ஆகவும், பலியானவர்களின் எண்ணிக்கை 14,058 ஆகவும் உயர்ந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X