சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஆக 01, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
 'டவுட்' தனபாலு

தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடி: தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்டு, சிறப்பாக செயல்பட்ட, சேலம் பெரியார் பல்கலைக்கழகம், அண்மை காலமாக, ஊழலின் உறைவிடமாக மாறி, பல சிக்கல்களையும், நெருக்கடிகளையும் எதிர்கொண்டு வருகிறது. இதனால், அங்கு படிக்கும் மாணவர்கள், பணியாற்றும் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

'டவுட்' தனபாலு: வாஸ்து சாஸ்திரம் சரியில்லையோ என்னவோ. சில நேரங்களில், வீடுகளில் பச்சிளம் குழந்தைகள் தொடர்ந்து அழும். அவற்றிற்கு வைத்த பெயரை மாற்றி விட்டால், அழுகை நின்று விடும். எனவே, சேலம் பல்கலைக்கழகத்திற்கு பெயரை மாற்றி வைத்தால், பலன் கிடைக்குமோ என்ற, 'டவுட்' ஆன்மிகவாதிகளுக்கு வருகிறது!பத்திரிகை செய்தி:
சென்னை ஆலந்துார் மெட்ரோ பெயரை, 'அறிஞர் அண்ணா ஆலந்துார் மெட்ரோ' என்றும், சென்ட்ரல் மெட்ரோ என்பது, 'புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ' என்றும், கோயம்பேடு மெட்ரோ, 'புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ' என்றும், தமிழக அரசால் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

'டவுட்' தனபாலு: இதெல்லாம் வீண் வேலை. நீங்கள் என்ன தான், பெயர் மாற்றினாலும், அது மக்களால் பயன்படுத்தப்படுவதில்லை. சென்னை விமான நிலையத்திற்கு, தலைவர்கள் பெயர் வைக்கப்பட்டுள்ளது; யாரும் அதை சொல்வதில்லை. அதுபோலத் தான் இதுவும். இது போன்ற புதிது புதிதாக சிந்திப்பது, விரைவில் சட்டசபை தேர்தல் வரவுள்ளது என்பதால் தானோ என்ற, 'டவுட்'டை வலுப்படுத்துகிறதே!


உலக சுகாதார அமைப்பின் தலைவர், டெட்ரோஸ் அதனோம்:
கொரோனாவால், 1.72 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுதும் பரவியுள்ள கொரோனா வைரசை கட்டுப்படுத்த, பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். கொரோனா பாதிப்பால் மனிதனின் வாழ்க்கை முடிந்து விட்டதாக அர்த்தம் கொள்ளக் கூடாது. மக்கள் இனி, கொரோனாவுடன் வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.

'டவுட்' தனபாலு: கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்பதை, நீங்கள் இப்போது கூறுகிறீர்கள். ஆனால், எங்கள் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மூன்று மாதங்களுக்கு முன்னரே சொல்லி விட்டார். அப்போது அவரை கண்டித்தவர்கள், அவரின் தீர்க்க தரிசனத்தை இப்போது பாராட்டவே செய்வர் என்பதில், 'டவுட்' இல்லை!lllபா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்:
கல்லுாரிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப் பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு, பல்வேறு காரணங்களால், கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வரும் நிலையில், நுழைவுத் தேர்வு, அவர்களை உயர்கல்வியில் நுழையவிடாத தேர்வாக அமைந்து விடும். இத்திட்டத்தை கண்டிப்பாக கைவிட வேண்டும்.
'டவுட்' தனபாலு: நுழைவுத் தேர்வு இருந்தால் தான், கல்வி தரமானதாக இருக்கும். கல்லுாரிகளில் சேர வேண்டுமானால், நன்றாக படிக்க வேண்டும்; நுழைவுத் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற நிபந்தனை இருந்தால் தான், மேல்நிலை படிப்பில் மாணவர்கள் ஆர்வமாக படிப்பர். இந்த நல்ல திட்டத்தை நீங்கள் எதிர்ப்பதன் பின்னணியில், வேறு காரணம் இருக்குமோ என்ற, 'டவுட்' வருகிறது!


காங்., முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம்:
நடப்பு நிதியாண்டில், 14 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். இதுபோதாது என, தொலைதொடர்பு மற்றும் விமான போக்குவரத்து துறைகளில் மிகுந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது; வேலைவாய்ப்பு குறையும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இதை எல்லாம் பார்த்துக் கொண்டு மோடி அரசு, செயலிழந்து நிற்கிறது.

'டவுட்' தனபாலு: ஏன், இரண்டு துறைகளுடன் நிறுத்தி விட்டீர்கள்... கொரோனாவால், நாட்டின் அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு காரணம், கொரோனாவா அல்லது பிரதமர் மோடியா; நீங்கள் மோடி மீது குற்றம்சாட்டுவது, அரசியல் காரணங்களுக்குத் தானே அன்றி, வேறு எதுவும் இல்லை என்பதில், யாருக்கும், 'டவுட்' இருக்க முடியாது!


தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்:
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், ஆயுர்வேத மருந்துகளும் பயன்படுத்தப்படுகின்றன. இம்மருந்துகளை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பெற்று கொள்ளலாம். ஏற்கனவே, சித்தா மருந்தான கபசுர குடிநீரும், ஓமியோபதி மருந்தான, 'ஆர்செனிக் ஆல்பம் - 30சி' ஆகியவையும் எவ்வித கட்டணமில்லாமல் வழங்கப்படுகின்றன.

'டவுட்' தனபாலு: இதைத் தான், தமிழகத்தில் கொரோனா துவங்கிய காலம் முதல், தமிழக மக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர். நான்கு மாதங்கள் கழித்து, இப்போது தான், தமிழக அரசுக்கு ஞானோதயம் வந்துள்ளதோ என்ற, 'டவுட்' வருகிறது!lll

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
02-ஆக-202016:50:36 IST Report Abuse
r.sundaram அரசு விமான போக்குவரத்து துறை இவ்வளவு மோசமாக போனதிற்கு காரணம் காங்கிரஸ் கட்சிதான். நமக்கு தேவைப்படுமா, தேவை படாதா, நம்மால் தவணை கட்டமுடியுமா, முடியாதா என்றெல்லாம் ஆலோசிக்காமல் நூறு விமானங்களை வாங்கியது காங்கிரஸ் அரசுதான். அதன் காரணமாகவே இந்த வீட்சி. மேலும் ஏர் இந்தியாவையும் இந்தியன் ஏர் லைன் யும் இணைத்ததது மகா பெரிய தப்பு. அதுவும் காங்கிரஸ் ஆட்சியில்தான் நடந்தது. இவர் என்னடாவென்றால் எல்லாவற்றிக்கும் மோதியை குறை சொல்கிறார். அரண்டவன் கண்ணுக்கு கண்டதெல்லாம் பேய் என்பதுபோல இவருக்கு எதை எடுத்தாலும் மோடியை குற்றம் சொல்வது வாடிக்கை.
Rate this:
Cancel
Abdul Rahman - Madurai,இந்தியா
02-ஆக-202016:45:52 IST Report Abuse
Abdul Rahman "சேலம் பல்கலைக்கழகத்திற்கு பெயரை மாற்றி வைத்தால், பலன் கிடைக்குமோ" - மிக மிக சரி. ஒரு தமிழ்நாட்டு கல்வி கழகத்திற்கு ஒரு தமிழின துரோகியாக ஈவேரா பெயரை வைக்கக்கூடாது. மாற்ற வேண்டும்.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
02-ஆக-202016:40:47 IST Report Abuse
r.sundaram ராமசாமி நாயக்கர் துட்டு துட்டு என்று அலைந்தவர் தானே, அதனால் அவர் பெயர் வைத்த பல்கலைக்கழகமும் அப்படியே இருக்கிறது, இதில் வியப்பில்லையே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X