சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

வெளிநாட்டினர் வெளுத்துக் கட்டும் நம்ம ஊர் மட்டன் பிரியாணி!

Added : ஆக 01, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
வெளிநாட்டினர் வெளுத்துக் கட்டும் நம்ம ஊர் மட்டன் பிரியாணி!ஞாயிறு முழு ஊரடங்கால், நண்பர்கள், 'கான்பரன்ஸ் காலில்' இணைந்தனர்.''எல்லாருக்கும் கேக்கறதா ஓய்...'' என, கேட்டு, உறுதி செய்து கொண்டார், குப்பண்ணா.''இதெல்லாம் ரொம்ப ஓவருங்க...'' என்றபடியே, முதல் தகவலுக்கு வந்தார், அந்தோணிசாமி.''என்ன விஷயம் வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''ஸ்ரீபெரும்புதூர் தொகுதி,
 வெளிநாட்டினர் வெளுத்துக் கட்டும் நம்ம ஊர் மட்டன் பிரியாணி!

வெளிநாட்டினர் வெளுத்துக் கட்டும் நம்ம ஊர் மட்டன் பிரியாணி!

ஞாயிறு முழு ஊரடங்கால், நண்பர்கள், 'கான்பரன்ஸ் காலில்' இணைந்தனர்.
''எல்லாருக்கும் கேக்கறதா ஓய்...'' என, கேட்டு, உறுதி செய்து கொண்டார், குப்பண்ணா.
''இதெல்லாம் ரொம்ப ஓவருங்க...'' என்றபடியே, முதல் தகவலுக்கு வந்தார், அந்தோணிசாமி.''என்ன விஷயம் வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''ஸ்ரீபெரும்புதூர் தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வான, பழனிக்கும், 'கொரோனா' வந்துச்சுங்க...
''சென்னையில இருக்குற, தனியார் மருத்துவமனையில, 15 நாளு, சிகிச்சையில இருந்தவரு, குணமாகி, வீட்டுக்கு திரும்பினாரு... அதுக்கு அப்புறம், எந்த நிகழ்ச்சிக்கும் போகாம, வீட்டுலயே இருந்தாருங்க...
''தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பா, வீடு கட்ட, ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், பால்நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த, 30 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டாங்க...''அந்த பயனாளிகள், 30 பேரையும், சென்னை, போரூர் பக்கத்துல இருக்குற, மதனந்தபுரத்தில் உள்ள, அவரோட வீட்டுக்கு வரவழைச்சு, வீடு கட்டுறதுக்கான பணியாணையை, எம்.எல்.ஏ., பழனி கொடுத்துருக்காங்க... அவர் வீட்டுக்கு போய் வந்தவங்க எல்லாம், 'கொரோனா' பீதியில இருக்காங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
''நம்ம ஊரு, 'மட்டன்' பிரியாணியை, ஒரு கட்டு கட்டுறாங்க பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், அன்வர்பாய்.''யாருங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.''டில்லியில நடந்த, 'தப்லிக்' மாநாட்டுக்கு வந்த பங்களாதேஷ், இந்தோனேஷியா உட்பட, ௧௧ நாடுகளைச் சேர்ந்த, 130 பேரு, ஊரடங்கால, வட சென்னையில உள்ள, ஹஜ் கமிட்டி கட்டடத்துல தங்கியிருக்காங்க பா..
.''அவங்களுக்கு, எந்த குறையும் இருக்கக் கூடாதுன்னு, அரசு உத்தரவிட்டுருக்கு... அதனால, கலெக்டர் மேற்பார்வையில, ரெவின்யூ இன்ஸ்பெக்டரு, போலீசாருல்லாம் நியமிச்சு, கவனிக்கிறாங்களாம்... ''வெளிநாடுகளின், 'ஸ்பெஷல்' சாப்பாடு செஞ்சு கொடுக்குறதுக்காக, சமையல் நிபுணர்களையும் நியமிச்சிருக்காங்க பா...
''வெளிநாடுகளின் தூதரக அதிகாரிகள்கிட்ட, அனுமதி வாங்கித் தான், சாப்பாடு செய்யுறாங்க... அங்கேயிருக்கிற பெரும்பாலானோருக்கு, நம்ம ஊரு மட்டன் பிரியாணி தான், ரொம்ப புடிக்குதாம் பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
''அந்த இன்ஸ்பெக்டர் தொல்லை தாங்கலைன்னு வியாபாரிகள் புலம்புதாவ வே...'' என, கடைசி தகவலுக்கு மாறினார், அண்ணாச்சி.''என்னன்னு விளக்கமா சொல்லும் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''தஞ்சாவூர் மேற்கு இன்ஸ்பெக்டரு, ஏரியா வசூலில் கொடிகட்டி பறக்குறாராம்... யாராவது, மாமூல் தரலைன்னா, கூட்டம் அதிகமா இருக்குறப்போ, கடைக்கு முன் நின்னு, சத்தம் போடுறாராம்... இது தொடர்பா, மேலிடத்துக்கு புகார் போயிருக்கு. அந்த இன்ஸ்பெக்டரிடம் விசாரணை நடக்குது வே...''அவரு, 'உள்ளூர் அமைச்சர் ஆதரவு, எனக்கு இருக்கு'ன்னு, விசாரணை அதிகாரிகளையே மிரட்டுறாராம்... ஏற்கனவே, இவரு மேல, பல புகார்கள் வந்ததால, சில மாசத்துக்கு முன், ஆயுதப்படைக்கு மாத்தியிருந்தாங்க... ஆனாலும், திருந்தலையே வே...'' என முடித்தார், அண்ணாச்சி.'
'அந்தோணிசாமி.... 'சேரன் செங்குட்டுவன்' வரலாறு புத்தகம் கேட்டேன்... நாளைக்கு மறக்காம எடுத்துட்டு வாங்கோ ஓய்...'' என்றார், குப்பண்ணா.நண்பர்கள், 'கான்பரன்ஸ்' இணைப்பைத் துண்டித்தனர்.
அரசு பணியை 'டெண்டர்' எடுத்து செய்யும் இன்ஜினியர்!

ஞாயிறு ஊரடங்கால், பெரியவர்கள், 'கான்பரன்ஸ் காலில்' இணைந்தனர். ''ஜாக்டோ - ஜியோ தரப்பினர் நொந்து போயிருக்காங்க...'' என, முதல் ஆளாக, விஷயத்தை ஆரம்பித்தார், அந்தோணிசாமி.''அவங்களுக்கு என்னாச்சு வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யணும்கிறது உட்பட, பல கோரிக்கைகளை வலியுறுத்தி, போன வருஷம், 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பினர் தொடர் போராட்டங்கள்ல ஈடுபட்டாங்களே...''இதுல ஈடுபட்ட, 5,062 பேருக்கு, 'மெமோ' குடுத்துட்டாங்க... அப்புறமா அரசு பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை வாபஸ் வாங்கிட்டாங்க...
''ஆனா, மெமோவால, நிறைய ஊழியர்களால ஓய்வு பெற முடியலை... ஓய்வூதிய பலனும் கிடைக்காம சிரமப்படுறாங்க...
''இது சம்பந்தமா, முதல்வர், தலைமை செயலரை பார்க்க, முயற்சி பண்ணியும் முடியலைங்க... ''இதனால, சீக்கிரமே சங்கத்தை கூட்டி, போராட்டம் நடத்தலாமான்னு ஆலோசனை பண்ண போறாங்களாம்...'' என்றார். அந்தோணிசாமி.
''சீக்கிரமே, உயர் அதிகாரி மேலயும் வழக்கு பதிவாகும்னு பேசிக்கிடுதாவ வே...'' என, அடுத்த மேட்டருக்கு நகர்ந்தார், அண்ணாச்சி.
''எந்த துறையில பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''கரூர் நகராட்சி அலுவலகத்துல, வருவாய் உதவியாளரா, ரேவதின்னு ஒரு பெண்மணி வேலை பார்க்காங்க... இவங்க, வீட்டு வரியை கம்மியா நிர்ணயிக்க, 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதா புகார் வந்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு பண்ணியிருக்காவ வே...
''கரூர் நகராட்சி அலுவலகத்துல சோதனையும் நடத்தி, ரேவதி செக் ஷன்ல பல ஆவணங்களை பறிமுதல் பண்ணியிருக்காவ... அங்க, லட்டு மாதிரி ஒரு ஆடியோவும் அவங்களுக்கு கிடைச்சிருக்கு வே...
''அதுல, வரி நிர்ணயம் செய்ய மனு குடுத்தவரிடம் பேசுற ரேவதி, 'நகராட்சி உயர் அதிகாரி, வீட்டை பார்த்துட்டு, வேலையை முடிக்க சொல்லிட்டார்... ''நீங்க, 'பார்மாலிட்டீஸ்'களை முடிச்சிட்டா, ரசீது போட்டுடலாம்'னு சொல்லியிருக்காவ... இதனால, நகராட்சி உயர் அதிகாரி மேலயும் லஞ்ச வழக்கு பாயும்னு சொல்லுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.''சுதா, தள்ளிப்போய் விளையாடு...'' என, பேத்தியிடம் பேசிய குப்பண்ணாவே,
''அரசாங்கத்துலயே வேலை பார்த்துண்டு, அரசாங்க டெண்டரையே எடுத்து பண்றார் ஓய்...'' என்றார்.''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''கோவை மாநகராட்சியில, மக்கும் குப்பையில, 'பயோ மைனிங்' முறையில உரம் தயாரிச்சு, மீத குப்பையை வெளியேற்ற, 60 கோடி ரூபாய் டெண்டரை, மும்பை நிறுவனம் எடுத்திருக்கு... அந்த நிறுவனத்திடம், கோவை நிறுவனம் சப் - டெண்டர் எடுத்திருக்கு ஓய்..
.''இந்த நிறுவனம், மாநகராட்சியில இருக்கற இன்ஜினியர் ஒருத்தரின் பினாமி நிறுவனமாம்... ஏற்கனவே இவர் மேல, குப்பை லாரிகள் வாங்கியதுல ஊழல் பண்ணிட்டதா, ஒரு குற்றச்சாட்டு நிலுவையில இருக்கு ஓய்...''இப்ப, அவர்கிட்டயே இந்த டெண்டரும் போயிருக்கறதால, 'உரம் தயாரிக்காமலே குப்பையை வெளியேற்றும் வேலை தான் நடக்கும்'னு, நேர்மையான ஊழியர்கள் புலம்பறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''இன்னைக்கு, நம்ம சரவணகுமாருக்கு பிறந்த நாள்... வாழ்த்து சொல்லிடுங்க பா...'' என, அன்வர்பாய் நினைவூட்ட, போனை, 'கட்' செய்த நண்பர்கள், 'வாட்ஸ் ஆப்'பில் வாழ்த்து அனுப்ப துவங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
02-ஆக-202006:03:31 IST Report Abuse
D.Ambujavalli குப்பையிலும் மாணிக்கம் தேடும் அரசு கில்லாடிகள் லஞ்சக் கூட்டாளிகள், வாங்கிய சமர்த்து போல ‘கொடுத்தும் ‘ தப்பிக்க மாட்டார்களா என்ன?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X