பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஆக 01, 2020
Share
Advertisement

ஆக., 2, 1859
திருநெல்வேலி மாவட்டம், சாம்பவர் வடகரை என்ற சிற்றுாரில், 1859 ஆக., 2ம் தேதி பிறந்தவர், ஆபிரகாம். தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். 1879-ல், சுருளிமலைக்குச் சென்று, கருணானந்த முனிவர் என்பவரிடம், மூலிகை மருத்துவத்தை கற்றார்.கடந்த, 1886-ல், தஞ்சாவூர் புறநகர் பகுதியில், 100 ஏக்கர் நிலம் வாங்கி, அதில் பெரிய மூலிகைப் பண்ணையை உருவாக்கினார். இவரின், 'கருணானந்தர் சஞ்சீவி மருந்துகள்' பெரும் வரவேற்பைப் பெற்றது. பிரிட்டிஷ் அரசு, இவருக்கு, 'ராவ் பகதுார்' பட்டம் வழங்கியது.நாதஸ்வரம், ஆர்மோனியம், வீணை, பிடில் ஆகிய வாத்தியங்களை இசைப்பதிலும், தேர்ச்சி பெற்றிருந்தார். பழந்தமிழ் இசை வடிவமே, இந்தியாவின் பல பகுதிகளில், பல்வேறு வடிவங்களில் இசைக்கப்படுகிறது என்பதை நிரூபிப்பதற்காக, முதன் முதலாக, அகில இந்திய இசை மாநாட்டை, தஞ்சாவூரில் நடத்தினார். 1912-ல், 'சங்கீத வித்யா மகாஜன சங்கத்தை' நிறுவினார். தமிழிசை ஆராய்ச்சி முடிவுகளை, 'கருணாமிர்த சாகரத் திரட்டு' என்ற இசை நுாலாக வெளியிட்டார். 1919 ஆக., 31ம் தேதி காலமானார்.ஆபிரகாம் பண்டிதர் பிறந்த தினம் இன்று!



Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X