ஆந்திராவில் ஒரே மாதத்தில் பத்து மடங்காக உயர்ந்த கொரோனா பாதிப்பு!

Updated : ஆக 01, 2020 | Added : ஆக 01, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

ஐதராபாத்: இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஆந்திராவில் கடந்த ஜூன் இறுதியில் 14,600 ஆக இருந்த கொரோனா பாதிப்பு ஒரே மாதத்தில் பத்து மடங்கு உயர்ந்து தற்போது 1.5 லட்சத்தை தாண்டியுள்ளது.



latest tamil news



ஆந்திராவில் இன்று வெளியான பரிசோதனை முடிவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் 9,276 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் மொத்த பாதிப்பு 1.5 லட்சத்தை கடந்துள்ளது. 1,407 பேர் இன்று வரை இறந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 76,614 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த ஜூன் 30-ம் தேதி மாநிலத்தில் 14,596 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக ஆந்திர சுகாதாரத் துறை கூறியிருந்தது. இந்த நிலையில் ஒரே மாதத்தில் இந்த எண்ணிக்கை பத்து மடங்கு உயர்ந்து 1.5 லட்சத்தை கடந்துள்ளது.


latest tamil news



பரிசோதனைகளை தற்போது அதிகப்படுத்தியிருப்பதால் பாதிப்பு அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது. இதுவரை 20,12,573 பேரிடம் பரிசோதனை நடந்துள்ளது. மாநிலத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 18 மடங்கு உயர்ந்துள்ளது. அங்கு 21,271 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த படியாக கர்னூலில் 18,081 பேரும், அனந்தபுரமு மாவட்டத்தில் 15,827 பேரும், குண்டூரில் 15,669 பேரும், விசாகப்பட்டினத்தில் 11,920 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
02-ஆக-202000:41:24 IST Report Abuse
தல புராணம் அம்மணமாக திரியும் ஒருவன் கண்ணை மூடிக்கிட்டானாம்.. அப்படி தான் இருக்கிறது நமது பத்திரிக்கையின் செய்திகள்.. 18 லட்சம் தொற்றுக்களுடன் வேகம் பிடிக்கும் ஆபத்து.. ஆனா செய்தியில் ஆஹா, ஓஹோ, வாங்க கோவிலை திறக்க போறோமுன்னு ரீல்.. சாகிறவன் சாகட்டும், நாம பத்திரிகை வித்து அரசு விளம்பரத்தில் ஜாலியாக இருக்கலாம் என்று உன்னத கொள்கை.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
02-ஆக-202000:34:18 IST Report Abuse
தல புராணம் ஒரே மாதத்தில் பத்து மடங்காக உயர்ந்த கொரோனா, ஆந்திராவில் மட்டுமா? எல்லாம் கட்டுக்குள் இருக்குன்னு எல்லா மூடர்கூடமும் கட்டுக்கதை, பொய் சொல்லிக்கிட்டு இருக்கு.. தினமும் 65,000 தொற்றுக்களை தாண்டிய வேகம். ஆகஸ்டுக்குள் 30 லட்சத்தை தாண்டப்போகிறோம். அதை பற்றிய ஒரு கவலையும் இல்லாமல் மூடர்கூடம் கோவிலை திறக்க ஏற்பாடு செய்கிறது ஜனங்களை கொன்று.. ஆட்சியை கவிழ்த்து கொண்டு ஜனநாயகத்தையும் கொல்கிறது..
Rate this:
Cancel
Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ
01-ஆக-202022:12:19 IST Report Abuse
Mannai Radha Krishnan திருப்பதி வெங்கிடாசலபதிக்கே பட்டை போடும் சீஃப் மினிஸ்ட்டர் இருக்கும் மாநிலத்தில் இப்படித்தான் இருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X