காங்.,கைப் போலவே பா.ஜ.,விலும் வாரிசு அரசியல்?: பட்டியல் நீள்கிறது

Updated : ஆக 03, 2020 | Added : ஆக 01, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
லோக்சபா, ராஜ்யசபா என இரண்டிலுமே உள்ள பா.ஜ., எம்.பி.,க்களில், 11 சதவீதம் பேர், வாரிசு அரசியல் அடிப்படையில் பதவிக்கு வந்துள்ளனர். எனவே, காங்கிரசைப் போலவே, பா.ஜ.,விலும், குடும்ப அரசியல் தலைதுாக்குவதாக விமர்சனம் எழுந்துள்ளது. காங்கிரஸ் மீதான மிக முக்கிய குற்றச்சாட்டே, நேரு, இந்திரா, ராஜிவ், சோனியா, ராகுல், பிரியங்கா என நீண்டுகொண்டே இருக்கும் வாரிசு அரசியல் என்பதுதான். அந்த ஒரு
காங்.,போலபா.ஜ.,விலும்.. வாரிசு அரசியல்?  பதவி பெறுவோர் பட்டியல் நீள்கிறது


லோக்சபா, ராஜ்யசபா என இரண்டிலுமே உள்ள பா.ஜ., எம்.பி.,க்களில், 11 சதவீதம் பேர், வாரிசு அரசியல் அடிப்படையில் பதவிக்கு வந்துள்ளனர். எனவே, காங்கிரசைப் போலவே, பா.ஜ.,விலும், குடும்ப அரசியல் தலைதுாக்குவதாக விமர்சனம் எழுந்துள்ளது.

காங்கிரஸ் மீதான மிக முக்கிய குற்றச்சாட்டே, நேரு, இந்திரா, ராஜிவ், சோனியா, ராகுல், பிரியங்கா என நீண்டுகொண்டே இருக்கும் வாரிசு அரசியல் என்பதுதான். அந்த ஒரு குடும்பத்தின் ஆதிக்கம் தான், அக்கட்சியை பல ஆண்டுகளாக கட்டுப்படுத்தி வருகிறது.பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா என, பா.ஜ., தலைவர்கள் அனைவருமே, பார்லிமென்ட், பொதுக்கூட்டம் என, பேசுவதற்கு எங்கு வாய்ப்பு கிடைத்தாலும், காங்.,கின் வாரிசு அரசியலை விமர்சிக்காமல் இருப்பதில்லை.'நாம்தார்'இந்த தலைவர்கள், ராகுலை இளவரசர் என்றும், அவரை, 'நாம்தார்' அதாவது குடும்ப பெயரால் அரசியல் வாழ்வு பெற்றவர் என்றும், தங்களை 'காம்தார்' அதாவது, உழைப்புக்கு பேர் போனவர்கள் என்றும் குறிப்பிடுவது வழக்கம். இந்நிலையில், அதே வாரிசு அரசியல், குடும்ப ஆதிக்கம் குறித்த விமர்சனங்கள், பா.ஜ.,வுக்குள்ளும் கேட்க துவங்கிஉள்ளன. காரணம், தற்போது ராஜ்யசபா எம்.பி.,களாகிஇருப்பவர்கள், அரசியல் செல்வாக்கு மிக்க குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.பா.ஜ.,வுக்கு, லோக்சபாவில், 303 எம்.பி.,க்கள், ராஜ்யசபாவில், 85 எம்.பி.,க்கள் என, மொத்தம் 388 பேர் உள்ளனர். இவர்களில், குடும்ப செல்வாக்கு அடிப்படையில் பதவிக்கு வந்தவர்கள், 45 பேர். இது, பா.ஜ.,வின் பார்லி., பலத்தில், 11 சதவீதம். குற்றச்சாட்டுதற்போதுள்ள ராஜ்ய சபா எம்.பி.,க்களில், ஜோதிராதித்ய சிந்தியா, விவேக் தாகூர், உதயன் ராஜே போஸ்லே, லெய்செம்பா சனஜோபா, நபம் ரெபியா, நீரஜ் சேகர், சம்பாஜி சத்ரபதி ஆகியோர், வாரிசு அரசியல் அடிப்படையில் பதவிக்கு வந்தவர்கள். லோக்சபாவிலோ, இந்த பட்டியலின் நீளம் அதிகம். மத்தியில் மட்டுமல்லாமல், பா.ஜ.,ஆளும் மாநிலங்களிலும், இதே குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது.

சில வாரங்களுக்கு முன் விரிவாக்கப்பட்ட ம.பி., அமைச்சரவையில் இடம்பிடித்த ஓம்பிரகாஷ் சக்ல்ச்சா, முன்னாள் முதல்வர் வீரேந்திர சக்ல்ச்சாவின் மகன். இன்னொவரான விஸ்வாஸ் சாரங், மூத்த தலைவர் கைலாஷ் சாரங்கின் மகன்.

தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:குடும்ப செல்வாக்கை வைத்து, பா.ஜ.,வில் பதவி பெறும் போக்கு, உ.பி., ம.பி.,மஹாராஷ்டிரா மாநிலங்களில் தான் அதிகம். மஹாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட, 20 சதவீத பா.ஜ., வேட்பாளர்கள், முன்னாள் பிரபலங்களின் வாரிசுகளே.கட்டமைப்பு அடிப்படையில், பலமாநிலங்களில், பா.ஜ., காங்கிரசை விட, பலமான கட்சியாக, உருவெடுத்து வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் செய்த அதே தவறை, பா.ஜ.,வும் செய்யத் துவங்கியுள்ளது.
அதனால் தான், ராஜஸ்தானில், சச்சின் பைலட் வருகைக்கு, பெரிய அளவில் வரவேற்பு இல்லை. 'வாரிசு அரசியல்வாதி என்பதால், அவரும், இன்னொரு அதிகார மையமாக உருவெடுப்பார்' என, அம்மாநில பா.ஜ.,வுக்குள் கருத்து உள்ளது.எனவே, பதவியில் இருந்தவர்களின் உறவுகள் என்ற அடிப்படையிலோ, குடும்ப பாரம்பரியத்தை வைத்தோ பதவி பெறும் பழக்கம், பா.ஜ.,வுக்குள்ளும் அதிகரித்தால், அதன் கட்டமைப்பில் நிச்சயம் பலவீனத்தை உண்டாக்கும்.இவ்வாறு, அந்த வட்டாரங்கள், கூறின.
எப்போதிருந்து ஆரம்பம்?கடந்த, 1999லிருந்து தான், குடும்ப செல்வாக்கு, வாரிசு அரசியல் மூலம், எம்.பி.,க்களாகும் போக்கு, இரு கட்சிகளிலும் தலைதுாக்கியது. அந்த ஆண்டில், காங்கிரசில் மட்டும், 36 பேர் வாரிசு எம்.பி.,க்களாக இருந்துள்ளனர். பா.ஜ., சார்பில், 31 எம்.பி.,க்கள் இருந்துள்ளனர்.13வது லோக்சபாவில் காங்கிரசில், 8 சதவீதம் பேரும், பா.ஜ.,வில் 6 சதவீதம் பேரும் வாரிசு அரசியல் மூலம் எம்.பி.,யாயினர். 2009ல் தான், வாரிசு அரசியல் பார்லிமென்ட்டை ஆட்டிப்படைத்தது. காங்கிரஸ் எம்.பி.,க்களில், 11 சதவீதம் பேரும், பா.ஜ., எம்.பி.,க்களில், 12 சதவீதம் பேரும், பாரம்பரியம் மிக்க குடும்பத்திலிருந்து வந்த எம்.பி.,க்களாக இருந்துள்ளனர்.


பார்லி.,க்குள், பா.ஜ.,வின் பரம்பரை உலாஅனுராக் தாக்குர்:- ஹிமாச்சல் பிரதேச முன்னாள் முதல்வர், பிரேம்குமார் துமலின் மகன்.
துஷ்யந்த்சிங்: ராஜஸ்தான் முன்னாள் முதல்வர், வசுந்தரா ராஜேவின் மகன்.
பி.ஒய்.ராகவேந்திரா-: கர்நாடக முதல்வர், எடியூரப்பாவின் மகன்.
ராஜ்பீர்சிங்: உ.பி., முன்னாள் முதல்வர் கல்யாண்சிங்கின் மகன்.
பிரவேஷ் வர்மா: டில்லி முன்னாள் முதல்வர், சாகிப்சிங் வர்மாவின் மகன்.
சங்கமித்ர மவுரியா: உ.பி., அமைச்சர், ஸ்வாமி பிரசாத் மவுரியாவின் மகள்
பூனம் மகாஜன்:- மறைந்த பா.ஜ., தலைவர் பிரமோத் மகாஜனின் மகள்.
பிரீதம் முன்டே: மறைந்த -முன்னாள் அமைச்சர், கோபிநாத் முண்டேயின் மகள்.
ஜெயந்த் சின்ஹா: முன்னாள் அமைச்சர், யஷ்வந்த் சின்ஹாவின் மகன்.
வருண்:- பா.ஜ., எம்.பி.,மேனகாவின் மகன்.
பங்கஜ்சிங்: ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங்கின் மகன்.
ஜோதிராதித்ய சிந்தியா:- மறைந்த முன்னாள் அமைச்சர், மாதவராவ்சிந்தியாவின் மகன்.
உதயன் ராஜே போஸ்லே: முன்னாள் எம்.பி., போஸ்லேயின் மகன்.
விவேக் தாக்குர்:- முன்னாள் அமைச்சர் சி.பி.தாக்குரின் மகன்.
லெய்செம்பா சனஜோபா-: மணிப்பூர் ராஜவம்சத்தின் வாரிசு.
நீரஜ் சந்திரசேகர்:- முன்னாள் பிரதமர், சந்திரசேகரின் மகன்.
சம்பாஜி சத்ரபதி: மராத்தி மன்னர், சத்ரபதி சிவாஜியின் வாரிசு.
நபம் ரெபியா: அருணச்சல பிரதேச முன்னாள் முதல்வர், நபம் துகியின் சகோதரர்.
--நமது டில்லி நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-ஆக-202021:53:24 IST Report Abuse
Navasakthi V Navasakthi V
Rate this:
Cancel
r ganesan - kk nagar chennai,இந்தியா
02-ஆக-202021:53:23 IST Report Abuse
r ganesan இந்த வாரிசு அரசியலையும் நேரு குடும்ப அரசியலையம் இணைத்து பேசுவது சரி இல்லை. காங்கிரஸ் சொத்து எல்லாமே நேரு குடும்பத்துக்கு சொந்தமானது. சென்னையில் irukkum காங்கிரஸ் அறக்கட்டளை உட்பட.
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
02-ஆக-202020:11:38 IST Report Abuse
siriyaar காசு சம்பாதிக்கும் வழிகள் அடைக்கப்பட வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X