சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாழ்வாக தொங்கும் மின்கம்பியால் ஆபத்து

Added : ஆக 01, 2020
Share
Advertisement
  தாழ்வாக தொங்கும் மின்கம்பியால் ஆபத்து

புதுச்சத்திரம் : மேட்டுப்பாளையம் விவசாய நிலங்கள் மீது தாழ்வாக தொங்கும் மின்கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுச்சத்திரம் அடுத்த மேட்டுப்பாளையம் பகுதிக்கு ஆலப்பாக்கம் துணை மின் நிலையம் மூலம் மின்வினியோகம் செய்யப்படுகிறது. இப்பகுதியைச் சேர்ந்த சில விவசாயிகள் மின்இணைப்பு பெற்று, போர்வெல் மூலம் விவசாயம் செய்கின்றனர். இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மீது, உயர்மின்னழுத்த மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால் டிராக்டர் மூலம் நிலங்களில் ஏர் உழவும், அறுவடை இயந்திரம் கொண்டு அறுவடை செய்யவும் விவசாயிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

மேட்டுப்பாளையம் பகுதியில் விவசாய நிலங்கள் மீது தாழ்வாக தொங்கும், மின் கம்பிகளை சீரமைக்க மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X